23 வயது யுவதியால் அனாதைகளாக்கப்பட்ட 3 பிஞ்சு குழந்தைகள்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வாகன விபத்தை ஏற்படுத்தி மூன்று பிஞ்சு பிள்ளைகளை அனாதையாக்கிய யுவதிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது கடந்த 2020 டிசம்பர் மாதம் கலிபோர்னியாவின் நியூபோர்ட் கடற்கரை பகுதியில் நடந்துள்ளது. இந்த வழக்கில் விசாரணையை எதிர்கொண்ட 23 வயது கிரேஸ் கோல்மன் என்ற யுவதிக்கு நியூபோர்ட் கடற்கரை நீதிமன்றம் 21 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை விதித்துள்ளது. நீதிபதி தீர்ப்பை அறிவிக்கையில் கிரேஸ் கோல்மன் கண்களில் நீர்வழிய தலைகுனிந்து நின்றதாக … Read more

இன்று பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது

சென்னை இன்று பொன்னியின் செல்வன் முதல் பாகம் படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம்  த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி உள்ளது.  ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பலரின் வரவேற்பைப் பெற்றது.  தற்போது இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. இன்று வெளியான ‘பொன்னி நதி’ என்ற இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பாடகர் பாம்பா பாக்யா பாடியுள்ளார். இளங்கோ கிருஷ்ணன் பாடலை … Read more

பீகாரில் படித்த பல்கலைக்கழத்துக்கு சென்றபோது ‘ஜேபி நட்டா கோ பேக்’ கோஷம்: மாணவர்களின் போராட்டத்தால் பரபரப்பு

பாட்னா: பாட்னா சென்ற பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு பல்கலைக்கழக மாணவ அமைப்பினர்  ‘ஜேபி நட்டா கோ பேக்’ கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகாரில் ஆளும் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, தான் படித்த பாட்னா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 2 நாள் மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கு வந்தார். அப்போது அவரை வழிமறித்த அகில இந்திய மாணவர் … Read more

மெட்ரோ ரயில் தூண்களில் மக்களை கவரும் மனுநீதிச் சோழனின் ஓவியங்கள்!

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் – ஓ.டி.எ பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் தூண்களில் மனுநீதி சோழன் கதை சொல்லும் ஓவியங்கள் பொது மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. சென்னையை அழகுமயமாக்க தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆகியவை இணைந்து சிங்கார சென்னை 2.0 திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரி பகுதிகளில் உள்ள சுற்றுச் சுவர்கள் அரசு அலுவலகங்களில் உள்ள சுற்றுச் சுவர்கள் ஆகிய பகுதிகளில் … Read more

'கடனுக்காக முதியவர்களை வீட்டினுள் வைத்து சீல் வைத்த வங்கி அதிகாரிகள்' – புதுவையில் கொடூரம்

புதுச்சேரியில் ஜப்தி செய்த வீட்டின் உள்ளே முதியவர்களை வைத்து சீல் வைத்த வங்கி அதிகாரிகளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி முத்தியால்பேட்டை புளோஸ் கார்மேல் தெருவைச் சேர்ந்தவர் துரை (எ) மாணிக்கவாசகம். இவர் தனது பெற்றோர் மற்றும் மனைவி பிள்ளைகளுடன் தனக்குச் சொந்தமான வீட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில், பில்டிங் காண்டராக்ட் தொழில் செய்து வரும் இவர், ஒரு தனியார் வங்கியில் கடன் பெற்றிருந்தார். இந்நிலையில் கடனிற்கான தவணையை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் இவர் கடன் … Read more

ஹாப்காம்சில் ஊழியர் பற்றாக்குறை கடைகளை நிர்வகிப்பதில் பாதிப்பு| Dinamalar

பெங்களூரு : விவசாயிகள், பொது மக்களுக்கு இடையே பாலமாக செயல்பட்ட ஹாப்காம்சில் ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில், ஊழியர்களை நியமிக்க தயாராகி வருகிறது.ஹாப்காம்ஸ் எனும் தோட்டக்கலைத்துறை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மார்க்கெட் மற்றும் பதப்படுத்தும் சொசைட்டி, விவசாயிகள், பொது மக்கள் இடையே பாலமாக செயல்படுகிறது.ஆரம்பத்தில் 900 க்கும் மேற்பட்ட, நிரந்தர ஊழியர்கள் இருந்தனர். 10 ஆண்டுகளாக ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தற்போது 500 பேர் மட்டும் பணியாற்றுகின்றனர். இதில் அடுத்த ஆண்டு 150 க்கும் … Read more

30வது வருட திரைப்பயணத்தில் இயக்குனர் ஷங்கர்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் எனப் பெயரெடுத்தவர் ஷங்கர். அவர் திரையுலகத்தில் இயக்குனராக அறிமுகமாகி நேற்றுடன் 29 வருடங்கள் நிறைவடைந்து தற்போது 30வது வருடத்தில் நுழைந்திருக்கிறார். அவர் முதன் முதலில் இயக்கிய 'ஜென்டில்மேன்' படம் வெளிவந்து நேற்றுடன் 29 வருடங்கள் முடிவடைந்துள்ளது. நடிகர் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக தன் திரையுலகப் பயணத்தை ஆரம்பித்தவர் ஷங்கர். அதன்பின் 'சூரியன்' படத்தை இயக்கிய பவித்ரனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தார். அதன் பிறகு 'ஜென்டில்மேன்' படத்தை … Read more

புதிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் ரஷ்யத் தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்யக் கூட்டமைப்பின் தூதுவர் யூரி மேட்டரி புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022 ஜூலை 28ஆந் திகதி, வியாழக்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். அமைச்சர் சப்ரியின் நியமனத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர் மேட்டரி, புதிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கான ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் வாழ்த்துச் செய்தியைக் கையளித்தார். இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பாரம்பரியமான வலுவான பங்காளித்துவத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் குறித்து ரஷ்யத் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் … Read more

குழப்பம் தீரும் வரை அ.தி.மு.க தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும்: பண்ருட்டி ராமச்சந்திரன்

அ.தி.மு.க.வின் மூத்தத் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘கட்சியில் குழப்பம் நீங்கும்வரை தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார்.தொடர்ந்து, செய்தியாளர்கள் கேட்ட சூடான கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்தார். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன், “அண்ணா திமுகவுக்கு இரண்டு தனித் தன்மைகள் உண்டு. தமிழ்நாட்டில் ஏழைகளுக்காக இருக்கக்கூடிய ஒரே கட்சி அதிமுக. மொழி, இன வேறுபாடு கிடையாது இந்தக் கட்சியில் யார் வேண்டுமானாலும் சேரலாம். அவர்களுக்கு சம உரிமை … Read more

குளிக்க சென்ற இரண்டு சிறுமிகளுக்கு நீரில் மூழ்கி பலி, காப்பாற்ற சென்றவர் மாயம்..!

சிறுமிகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் தனது குடும்பத்தினருடன் சீனிவாசன்  மேல்மலையனூர் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது, மாண்டூர் பாலாற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது, சதீஷின் மகள்களான வேதஸ்ரீயும் , சிவசங்கரியும் ஆழமான இடத்திற்கு சென்றுள்ளனர்.  நீச்சல் தெரியாததால் மூழ்கினர். இதனை கண்ட சீனிவாசன் அவர்களை காப்பாற்ற சென்றார் அப்போது அவரும் மூழ்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். … Read more