டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி: காவல் துணைக் கண்காணிப்பாளர் பணிக்கு தேர்வாகிய தமிழ் வழிக் கல்வி மாணவி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற மாணவி, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று காவல் துணைக் கண்காணிப்பாளர் பணிக்கு தேர்வாகி உள்ளார். வடவாளம் ஊராட்சி கிழக்கு செட்டியாபட்டியைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மனைவி வீரம்மாள். இவர்கள், உள்ளூரில் டீக்கடை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ரேவதி, வனிதா, பவானியா, திலகா ஆகிய 4 மகள்கள் உள்ளனர். இவர்களில் ரேவதி, வனிதாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. பிளஸ் 2 … Read more

ஒரே குடும்பத்தில் 4 ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் – யார் இவர்கள் தெரியுமா ..?

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் 4 பேர் ஐஓஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வில் பாஸ் ஆகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் லால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனில் பிரகாஷ் மிஸ்ரா. இவர் கிராம வங்கியில் மேலாளராக பணிபுரிகிறார். இவருக்கு யோகேஷ் மிஸ்ரா, ஷமா மிஸ்ரா, மாதுரி மிஸ்ரா, லோகேஷ் மிஸ்ரா ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர். கிராம வங்கி அதிகாரியான அனில் பிரகாஷுக்கு தனது இரு ஆண் பிள்ளை மற்றும் இரு பெண் … Read more

அமைச்சரும், நடிகையுமான ரோஜாவை ஒரேநேரத்தில் 3000 புகைப்படக் கலைஞர்கள் படம்பிடித்து சாதனை

ஆந்திர மாநில விளையாட்டுத் துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜாவை ஒரே நேரத்தில் மூவாயிரம் புகைப்படக் கலைஞர்கள் படம்பிடித்ததற்காகக் கின்னஸ் சாதனைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஒருவரை ஒரேநேரத்தில் அதிகம்பேர் படம் எடுத்த சாதனைக்காக இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தன்னைப் படம்பிடித்த புகைப்படக்கலைஞர்களின் பின்னணியில் ரோஜா செல்பியும் எடுத்துக்கொண்டார். இதுகுறித்த படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் நிலையில், ரோஜாவின் சாதனைக்கு ரசிகர்களும் தொண்டர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.     Source link

அறநிலையத்துறை புதுக்கோட்டைத் தேர் விபத்து குறித்து விசாரணை

புதுக்கோட்டை இன்று நடந்த புதுக்கோட்டைத் தேர் விபத்து குறித்து அறநிலையத்துறை விசாரணை நடத்த உள்ளது. இன்று புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் கோயிலில் தேரோட்டம்  நடைபெற்றது.   இந்த தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் பக்தர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.  இன்றைய தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விபத்தை தொடர்ந்து சப்பரங்களில் வைக்கப்பட்டிருந்த சுவாமி சிலைகளும் கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.  விபத்து நடந்த இடத்தில், இந்து … Read more

சென்னையில் இருந்து கணவருடன் ஆந்திராவுக்கு சுற்றுலா சென்ற புதுமணப் பெண் கொலை

சென்னை: சென்னையில் இருந்து கணவருடன் ஆந்திராவுக்கு சுற்றுலா சென்ற புதுமணப் பெண் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சித்தூர் அருகே உள்ள கைலாச கோனே அருவிக்கு சென்னையை சேர்ந்த மதன் -தமிழ்ச்செல்வி கடந்த மாதம் சுற்றுலா சென்றனர்.  ஒரு மாதம் ஆகியும் தமிழ்ச்செல்வி வீடு திரும்பாததால் அவருடைய பெற்றோர் செங்குன்றம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தமிழ்ச்செல்வியை காதலித்து திருமணம் செய்த மதனை பிடித்து போலீசார் விசாரித்த போது கத்தியால் குத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

முதல்வர் பெயரையே மாற்றி சொன்ன பாஜக மாஜி அமைச்சரின் ‘டங்க் சிலிப்’: மத்திய பிரதேசத்தில் பரபரப்பு

குவாலியர்: மத்திய பிரதேச மாநில முதல்வரின் பெயரையே மாற்றிச் சென்ன பாஜக முன்னாள் அமைச்சர், தனது நாக்கு நழுவிட்டதாக பின்னர் தெரிவித்தார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் இமார்தி தேவி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்ற பாஜகவினருக்காக நடத்தப்பட்ட விழாவில் பங்கேற்றார். குவாலியர் அடுத்த டப்ராவில் பேசும்போது, ஜோதிராதித்ய சிந்தியாவின் தீவிர … Read more

தமிழர்களின் 'வல்லாட்டம்' – தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்ட சதுரங்கத்தின் பண்டைய வரலாறு!

இன்றைய சதுரங்கம் ஆனது 1945 இற்கு பின்னரே இன்றைய வடிவத்தினை எடுக்கின்றது. ஆனால், அதற்கு முன்னரும் சற்று வேறுபட்ட முறைகளில் சதுரங்கம் ஆடப்பட்டே வந்துள்ளது. சிந்துவெளி நாகரிகத்திலேயே சதுரங்கம் விளையாடப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சதுரங்க ப்பலகை, சதுரங்கக் காய்களையும் அங்கு கண்டெடுத்தனர் ஆய்வாளர்கள். தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் இந்த விளையாட்டுக் காணப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஆனால் அதற்கு பெயர் சதுரங்கம் அல்ல! வல்லாட்டம்! தமிழர்களின் பாரம்பரிய வல்லாட்டத்தின் வரலாறு இதோ! Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை உயர்த்திய ஹெச்.டி.எஃப்.சி வங்கி! எவ்வளவு தெரியுமா?

வீட்டுக் கடன் வழங்குவதில் முன்னணி நிறுவனமான ஹெச்டிஎஃப்சி, கடனுக்கான வட்டியை கால் சதவிகிதம் அதிகரித்துள்ளது. புதிதாக பெறப்படும் கடனுக்கு மட்டுமின்றி ஏற்கெனவே பெறப்பட்ட கடன்களுக்கும் பொருந்தும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் ஐந்தாவது முறையாக கடன் வட்டியை ஹெச்டிஎஃப்சி அதிகரித்துள்ளது. மே மாதத்தில் இருந்து இதுவரை 1.15 சதவிகிதம் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. இப்போதைய கால் சதவிகித வட்டி உயர்வு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வீடு, வாகனக் கடன் வட்டி … Read more

100க்கு 151 மார்க் எடுத்த பீகார் மாணவர்: பல்கலை.,அச்சுபிழை காரணமாம்| Dinamalar

பாட்னா: பீகார் மாநிலத்தில் பல்கலை ஒன்றின் மாணவர் அரசியல் பாட பிரிவில் 100க்கு 151 மார்க்குகள் எடுத்துள்ளார். இது அச்சுபிழை காரணம் என பல்கலை., தெரிவித்து உள்ளது. பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ளது லலித்நாராயண்மிதிலா பல்கலைகழகம். இந்த பல்கலைகழகத்தில் ஹானர்ஸ் இளங்கலை பிரிவு மாணவர் ஒருவர் அரசியல் பாட தேர்வை எழுதினார். இதில் அவர் 100க்கு 151 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்த மதிப்பெண் வித்தியாசம் குறித்து மாணவர் கூறுகையில் இவை தற்காலிக மதிப்பெண் பட்டியல் என்ற … Read more

பெற்றோர்களுக்கு 70ம் கல்யாணத்தை செய்துவைத்த தனுஷ்

திரைப்பட இயக்குநர் கஸ்துரிராஜா, அவர் மனைவி விஜயலக்ஷ்மி ஆகிய இருவருக்கும் தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் இணைந்து நேற்று முன்தினம் சென்னை கிழக்கு கடற்கரையில் உள்ள தனுஷ் வீட்டில் கஸ்துரிராஜா 70 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு ஆயுள் விருத்திக்காக சதாபிஷேக ஹோமம் செய்து வழிபாடு செய்தனர். இந்த நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக ஏற்பாடுசெய்யப்பட்டது. இதில் கஸ்துரிராஜாவின் மகன்கள் தனுஷ், செல்வராகவன் மற்றும் இரு மகள்கள், தயாரிப்பாளர் தாணு மற்றும் தனுஷின் குடும்பத்தினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். … Read more