கடனில்லா இந்த 3 பங்குகளை வாங்கலாம்.. நல்ல ஏற்றம் காணலாம்..!

ஒரு நிறுவனத்தில் கடன் இல்லையென்றாலே அது நல்ல முறையில் இயங்கி வருவதோடு, அது எதிர்காலத்தில் விரிவாக்கம் செய்யவும் உதவிகரமாக இருக்கும். இதனால் அந்த நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமும் எதிர்காலத்தில் நிச்சயம் அதிகரிக்கலாம். இதன் காரணமாக அதன் பங்குகள் வளர்ச்சியும் மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு வாங்க சரியான நேரமாக பார்க்கப்படுகிறது. அப்படி சில பங்குகளைத் தான் தரகு நிறுவனம் வாங்க பரிந்துரை செய்துள்ளது. அது என்னென்ன பங்குகள்? இலக்கு விலை எவ்வளவு? வாருங்கள் பார்க்கலாம். நகை … Read more

பிரதமர் பொதுமக்களிடம் கோரிக்கை

நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கு அரசாங்கத்துடன் புரிந்துணர்வுடன் இணைந்து செயற்படுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.  ஒரு நாடு முன்னோக்கி செல்ல வேண்டுமாயின் சட்டம் ஒழுங்கு மிக அவசியமாகும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.  இன்று (31) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் அங்கு மஹாநாயக்க தேரர்களின் ஆசியைப் பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார். நாட்டின் எதிர்காலத்திற்காக சர்வதேச ரீதியில் எமக்கு ஆதரவுகள் கிடைக்கின்றன. சட்டம், … Read more

கோபிச்செட்டிப்பாளையம் அருகே இரு கார்கள் மோதி விபத்து

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே அதிவேகமாக சென்ற இரு கார்கள் மோதிக்கொண்ட விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாஸ்கரன் என்பவர் தமது குடும்பத்தினருடன் காரில் பெங்களுரு சென்று கொண்டிருந்தார். கோபிச்செட்டிப்பாளையம் அருகே சென்றபோது, சரக்கு வாகனத்தை பாஸ்கரன் முந்த முயன்றதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில், மற்றொரு காரும் பாஸ்கரனின் காரை முந்த முயற்சித்தது. அப்போது, எதிர்பாராவிதமாக அந்த கார் பாஸ்கரனின் கார் மீது மோதியதில், இரு கார்களும் சாலையோர விவசாய நிலத்தில் புகுந்து நின்றன. … Read more

'நீலகிரி மக்களுக்காக போராடுவேன்' – அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலாளர் பேச்சு

கோத்தகிரி: ”நீலகிரி மக்களுக்காக போராட்டங்கள் நடத்தப்படும்” என்று புதியதாக நியமிக்கப்பட்ட ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் எம்.பாரதியார் தெரிவித்தார். அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்ட செயலாளராக வெலிங்டன் கன்டோன்மெண்ட் துணை தலைவர் எம்.பாரதியார் நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பு ஏற்றுக்கொண்ட பாரதியார் தனது ஆதரவாளர்களுடன் இன்று கோத்தகிரியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருக்கு அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி வரவேற்பு அளித்தனர். அப்போது … Read more

யூடியூப் பார்த்து ஒயின் தயாரித்த சிறுவன்..! – காவல்துறை சொல்வது என்ன ..?

யூடியூப் பார்த்து சிறுவன் ஒருவன் கேரளாவில் ஒயின் தயாரித்துள்ளான். யூடியூபில் பார்த்து செய்முறைகளை கொண்டு அந்த சிறுவன் தயாரித்துள்ளான். பாட்டிலில் திராட்சைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட அந்த ஒயினை மண்ணில் புதைத்து பின்னர் அதை எடுத்து தனது நண்பனுக்கும் குடிக்க கொடுத்துள்ளான். அதை குடித்த அந்த சிறுவனின் நண்பனுக்கு உடல் சோர்வும் வாந்தியும் ஏற்பட்டதாக மருத்துவமனை கூறுகிறது. தாமாக முன் வந்து விசாரணை மேற்கொண்டது கேரள காவல்துறை, அப்போது சிறுவன் தயாரித்த ஒயினை கைப்பற்றி அதை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். … Read more

இலங்கையை நோக்கி விரையும் சீன கப்பல் தொடர்பில் இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்

இலங்கையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் சீன கப்பலின் நடமாட்டத்தை அவதானித்து கொண்டிருப்பதாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் பிரின்டிற்கு தெரிவித்துள்ளன. இது தொடர்பில் பிரின்ட் வெளியிட்டுள்ள தகவலில்,“இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செல்லும் சீன கப்பலின் நடமாட்டத்தை இந்திய கடற்படை கண்காணிக்கின்றது. சீன கப்பல் ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடையும் என அறியமுடிகின்றது. யுவான் வாங்-5 என்ற சீனாவின் ஆராய்ச்சி கப்பல் விண்வெளி மற்றும் செய்மதி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. குறிப்பிட்ட கப்பலின் வருகையை முதலில் மறுத்த இலங்கையின் … Read more

பார்வையற்ற மாற்றுத்திறனாளி தலைமையில் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை

மதுரை பார்வையற்ற மாற்றுத்திறனாளி தலைமையில் 180 பேர் மதுரையில் இருந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையைத் தொடங்கி உள்ளனர். மதுரையில் புது சிறை வீதி மில் காலனியில் வசிக்கும் பாக்கியம் எனும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் ஆரம்பத்தில் 5 பேருடன் மதுரையிலிருந்து நாகை மாவட்டம் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திற்கு பாதயாத்திரையாகப் புறப்பட்டார். பிறகு ஒவ்வோர் ஆண்டும் இவருடன் இணைந்து பாதயாத்திரை செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது. இவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் வரை சுமார் … Read more

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மகளிர் சி அணியில் நந்திதா வெற்றி

சென்னை: மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மகளிர் சி அணியில் நந்திதா வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா முதன்முறையாக ஒலிம்பியாட்டில் பங்கேற்று 3- வது சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.

சர்வதேச புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரை கவுரவிக்கும் நிகழ்ச்சி ரத்து: சர்ச்சை கருத்துகள் உள்ளதாக போலீசில் புகார்

ஆக்ரா: சர்வதேச புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர்  கீதாஞ்சலி யை கவுரவிக்கும் நிகழ்ச்சி ஆக்ராவில் ரத்து செய்யப்பட்டது. இவ்விசயம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில், ‘ரெட் சமாதி’ என்ற நாவல் எழுதி சர்வதேச புக்கர் பரிசு பெற்ற இந்தி மொழி எழுத்தாளர் கீதாஞ்சலி யை கவுரவிக்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அவரது அந்த நாவலில் ஆட்சேபனைக்குரிய குறிப்புகள் இருப்பதாகவும், அதனால் அவருக்கு பாராட்டு விழா நடத்தக் கூடாது எனக்கூறி ஆக்ராவை சேர்ந்த சந்தீப் … Read more

புதுக்கோட்டை: கோயில் தேர் சாய்ந்து 5 பேர் காயம்.. விபத்துக்கு என்ன காரணம்?

புதுக்கோட்டையில் முறையான பராமரிப்பு இன்றி தேரோட்டம் நடைபெற்றதால் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதுக்கோட்டை திருக்கோகர்னேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் இன்று காலை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்ல முயன்றனர். மேடான பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரை, அதிகப்படியாக பக்தர்கள் வடம் பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மேடான பகுதியிலிருந்து தேர் வேகமாக கீழிறங்கியபோது, அதன் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக சக்கரத்தின் கீழ் தடுப்புக்கட்டையை வைத்ததாக தெரிகிறது. பொதுவாக தேரின் … Read more