கொல்கத்தா: அமலாக்கத் துறை சோதனையில் சிக்கியது தனது பணம் அல்ல என்று மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்தா சட்டர்ஜி புலம்பியுள்ளார். மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்ட முன்னாள் கல்வி அமைச்சர் பார்தா சாட்டர்ஜியையும், அவருடைய உதவியாளரும், தமிழ் நடிகையுமான அர்பிதா முகர்ஜியையும் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அர்பிதாவின் வீடுகளில் பதுக்கியிருந்த ரூ.49 கோடி பணம், 6 கிலோ தங்கக் குவியல் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக ஜோகாவுக்கு அழைத்து செல்லப்பட்ட சாட்டர்ஜி, `அமலாக்கத் துறை சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் எனதல்ல. நேரம் வரும்போது இந்த சதிக்கு யார் காரணம் என்பது தெரிய வரும். பாரபட்சமற்ற விசாரணை நடக்கவே, கட்சி தலைமை தன்னை நீக்கி உள்ளது. இதில், முதல்வர் மம்தாவின் முடிவு சரியானதே,’ என்று தெரிவித்தார்.