ஆதிசக்தி மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா| Dinamalar

தங்கவயல : ராபர்ட்சன் பேட்டை நான்காவது பிளாக் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிசக்தி மாரியம்மன் கோவில் 59ம் ஆண்டு ஆடித்திருவிழா வரும் 4 முதல் 6ம் தேதி வரை நடக்கிறது.ஆதிசக்தி மாரியம்மன் கோவிலில், ஆடித்திருவிழாவை முன்னிட்டு வரும் 4ம் தேதி காலை சிறப்பு பூஜை, தீபாராதனை, பிற்பகல் 3:15 மணிக்கு ஊர் எல்லை பூஜை, அம்மன் வீதி உலா, இரவு 7:30 மணிக்கு ஓம் சக்தி மன்றத்தினரின் அக்னி சட்டி ஊர்வலம், இரவு 8:00 மணிக்கு காப்பு கட்டுதல், அம்மனுக்கு வெள்ளி கவச அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

வரும் 5ம் தேதி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 12:30 மணிக்கு குளக்கரையிலிருந்து அலங்கரிக்கப்பட்ட பூ கரகம், பம்பை நாதஸ்வரம் முழங்க வீதி உலா; அம்மனுக்கு சந்தன அலங்காரம், மகா மங்களாரத்தி, பிற்பகல் 1:00 மணிக்கு கூழ் வார்த்தல், அன்னதானம், இரவு 8:00 மணிக்கு அம்மன் தேர் பவனி நடக்கிறது.’தொடர்ந்து, 6ம் தேதி காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை, 10:45 மணிக்கு மஞ்சள் நீராடி குளக்கரையில் கரைப்பு, பிற்பகல் 1:00 மணிக்கு அம்மனுக்கு கும்பம் படைத்து, அன்ன பிரசாதம் வழங்கப்படும்’ என கோவில் கமிட்டியினர் அறிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.