வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஐதராபாத்: ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமாராவின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஒன்றுபட்ட ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவ்-ன் மகள் உமா மகேஸ்வரி. இவர் தற்போதைய தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் இன்று (ஆக.,1) தூக்கில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
உமா மகேஸ்வரி கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகக்கூறப்படுகிறது. என்.டி.ராமாராவின் 12 பிள்ளைகளில் கடைசி மகள் உமா மகேஸ்வரி. இவர் தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் சகோதரியாவார். ஒன்றுபட்ட ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி இவரின் சகோதரியாவார்.
உமா மகேஸ்வரியின் உடலை கைப்பற்றிய போலீசார், உடல் கூராய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement