சிக்கமகளூரு : ”அரசு மருத்துவமனைகளில், ஆப்பரேஷன் பிரசவங்கள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது,” என சிக்கமகளூரு கலெக்டர் ரமேஷ் தெரிவித்தார்.சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மாவட்ட சுகாதாரத் துறையினர் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது:கடந்த மூன்று மாதங்களில், சிக்கமகளூரில் 3,442 பிரசவங்கள் நடந்துள்ளன.
இவற்றில், 53 சதவீதம் ஆப்பரேஷன் பிரசவமாகும். ஏப்ரல் முதல் ஜூன் வரை, இந்த மாவட்டத்தில் ஆறு பச்சிளம் குழந்தைகள் இறந்தன. கடூரில் ஆறு பச்சிளம் குழந்தைகள் இறந்தன. இது கவலையளிக்கிறது.அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் வல்லுனர், மகப்பேறு நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மலேரியா, டெங்கு, காச நோய் உட்பட மற்ற நோய்களை கட்டுப்படுத்த வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கல்வித்துறை ஒருங்கிணைப்பில், மாவட்டத்தின் 1 – 19 வயதுக்கு உட்பட்ட 2.52 லட்சம் பேருக்கு, அலெக்ஜென்டஜோல் 40 எம்.ஜி., மாத்திரைகள் அளிக்க வேண்டும்.குழந்தைகளுக்கு அதிகமான வயிற்று போக்கை கட்டுப்படுத்த, ஆகஸ்ட் 1 முதல், 15 வரை அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், சமுதாய மையங்களில் சிகிச்சை அளிக்கப்படும். வீட்டில் ஓ.ஆர்.எஸ்., தயாரிப்பது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்படும்.ஒருவருக்கு மலேரியா, 38 பேருக்கு டெங்கு, 11 பேருக்கு சிக்குன் குனியா ஏற்பட்டுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத கடைகளை மூட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement