எகிறிய ஐடிசி லாபம்.. ஜுன் காலாண்டில் எவ்வளவு லாபம் தெரியுமா?

இந்தியாவின் ,முன்னணி வணிக நிறுவனங்களில் ஐடிசியும் ஒன்று, பல்வேறு வணிகத்தினை செய்து வரும் இந்த நிறுவனம் இன்று அதன் ஜூன் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

அதன் படி முதல் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த லாபம் 33.46% அதிகரித்து, 4462.25 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதே கடந்த ஆண்டில் 3276.48 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் அஸ்திவாரமே ஆட்டம் காணலாம்.. வங்கிகள் 0 பில்லியன் இழப்பினை காணலாம்.. ஏன் தெரியுமா?

வருவாய் எவ்வளவு?

வருவாய் எவ்வளவு?

சிகரெட் முதல் ஹோட்டல் வணிகம் வரையில் கோலேச்சி வரும் இந்த நிறுவனத்தின், மார்ச் காலாண்டு நிகர லாபம் 4.6% அதிகரித்து, 4196 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்தின் வருவாய் விகிதம் 41% அதிகரித்து, 18,320 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 12,959 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இலக்கினை தாண்டிய லாபம்

இலக்கினை தாண்டிய லாபம்

நிபுணர்கள் இதன் நிகரலாபம் 22.4% முதல் 25.3% வரையில் அதிகரித்து, 3687.3 கோடி ரூபாயில் இருந்து 3775 கோடி ரூபாய் வரையில் அதிகரிக்கலாம் என கணித்திருந்தனர். ஆனால் இந்த இலக்கினை எல்லாம் தாண்டி லாபம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிகரெட் வணிகம்
 

சிகரெட் வணிகம்

இதே இதன் எபிடா விகிதமானது 5646.10 கோடி ரூபாயாக உள்ளது. எனினும் இது இன்னும் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக அறிவித்துள்ளது. இதன் மார்ஜின் விகிதம் 32.7% அதிகரித்துள்ளது.

இதன் சிகரெட் வணிகத்தில் கடந்த ஆண்டினை காட்டிலும் 29% வளர்ச்சி கண்டு, 7464.10 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. சிகரெட் அல்லாத வணிகத்தில் 19.49% வளர்ச்சி கண்டு, 4458.71 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.

ஹோட்டல் வணிகம்

ஹோட்டல் வணிகம்

இதே இதன் ஹோட்டல் வணிகத்தின் மூலம் கிடைத்த வருவாய் 580.71 கோடி ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 133.67 கோடி ரூபாயாக இருந்தது. இது சுமார் 5 மடங்கு அதிகரித்துள்ளது. இதே பேப்பர் போர்டு, பேப்பர் & பேக்கேஜிங் வணிகத்தில் 43.35% அதிகரித்து, 2267.22 கோடி ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.

செயல்பாட்டு வருவாய்

செயல்பாட்டு வருவாய்

இதன் செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய் விகிதமானது 39.25% அதிகரித்து, 19,831.27 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளளது. இது கடந்த ஆண்டில் 14,240 கோடி ரூபாயாக இருந்தது.

இதற்கிடையில் இன்று இப்பங்கின் விலை 1.52% அதிகரித்து பி எஸ் இ-ல் 307.55 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

ITC reported consolidated profit jumps 33% to Rs.4462 crore in june quarter

ITC reported consolidated profit jumps 33% to Rs.4462 crore in june quarter/எகிறிய ஐடிசி லாபம்.. ஜுன் காலாண்டில் எவ்வளவு லாபம் தெரியுமா?

Story first published: Monday, August 1, 2022, 19:07 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.