டெல்லி: விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை வலியுறுத்தி எதிர்கட்சி எம்.பி.க்கள் தொடர் முழுக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர் அமளி காரணமாக 11-வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியது. இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடியபோது பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி எதிர்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். என்.எஸ்.சி.ஆட்கள் தேர்வில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.