என்ன நடந்தது என்றே புரியவில்லை… புலம்பெயர்ந்தவர் கொலையில் கைதான நபரின் வாக்குமூலம்


இத்தாலியில் தெருவோர வியாபாரியை அடித்தே கொலை செய்த வழக்கில் கைதான நபர், எப்படி அந்த சம்பவம் நடந்தது என்று தெரியவில்லை என பொலிசாரிடம் கூறியுள்ளார்.

இத்தாலியின் சிவிடனோவா மார்ச்சே நகரில் நடந்த இந்த கோர சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கியிருந்தது.
இந்த வழக்கில் 32 வயதான Filippo Claudio Giuseppe Ferlazzo என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நைஜீரிய நாட்டவரான Alika Ogorchukwu தமது கடையருகே அழகான பெண் ஒருவர் கடந்து செல்ல, அவரிடம் ஏதேனும் விற்பனை செய்யும் நோக்கில், உண்மையில் நீங்கள் அழகு என புகழ்ந்துள்ளார்.

என்ன நடந்தது என்றே புரியவில்லை... புலம்பெயர்ந்தவர் கொலையில் கைதான நபரின் வாக்குமூலம் | Italy Street Seller Death Suspect Tells Cops

ஆனால் அதன் பின்னர் மொத்த பார்வையாளர்கள் மத்தியில் அந்த நைஜீரிய நாட்டவர் கொடூரமாக தாக்கப்பட்டதுடன், அடித்தே கொல்லப்பட்டார்.
தொடர்ந்து பொலிசார் முன்னெடுத்த துரித நடவடிக்கை காரணமாக 32 வயது இத்தாலியர் கைதானார்.

தற்போது அன்கோனாவில் உள்ள மொன்டாகுடோ சிறையில் உள்ள அந்த இத்தாலியர், சம்பவத்தின் போது என்ன நடந்தது என்பது தமக்கு இன்னமும் விளங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

என்ன நடந்தது என்றே புரியவில்லை... புலம்பெயர்ந்தவர் கொலையில் கைதான நபரின் வாக்குமூலம் | Italy Street Seller Death Suspect Tells Cops

மட்டுமின்றி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரிய அவர், தமது காதலியின் கைகளைப்பற்றி அவர் வலுக்கட்டாயமாக விற்பனைக்கு முயன்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் தாக்கவில்லை எனவும், ஆனால் கட்டுப்படுத்த முடியாத ஆத்திரத்தால் அது நடந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, Ferlazzo உளவியல் ரீதியான பாதிப்பு கொண்டவர் எனவும், கோபத்தை கட்டுப்படுத்தும் சிகிச்சையில் உள்ளார் எனவும் அவர் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், அந்த வாதத்தை ஏற்க பாதிக்கப்பட்டவரின் தரப்பு மறுத்துள்ளது.

என்ன நடந்தது என்றே புரியவில்லை... புலம்பெயர்ந்தவர் கொலையில் கைதான நபரின் வாக்குமூலம் | Italy Street Seller Death Suspect Tells Cops

மேலும் Ferlazzo தரப்பு வாதத்தில், இது இன ரீதியான தாக்குதல் அல்ல எனவும், அப்போதைய சூழலில் ஏற்பட்ட ஆத்திரத்தால் ஏற்பட்ட கொலை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி நாளை உடற்கூராய்வுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது. இத பின்னரே அவரது மரணம் மூச்சுத்திணறல் காரணமா அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்டதா என்பதை தீர்மானிக்கும் என கூறப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.