எரிபொருள் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள புதிய தகவல்


எரிபொருள் விநியோகத்தின் போது இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய எரிபொருள் உரிமத்தின் கியூ.ஆர் இலக்கத்திற்கு புறம்பான வகையில் இடம்பெறக்கூடிய முறைகேடுகள் குறித்து இவ்வாறு முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முறைகேடுகள்

எரிபொருள் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள புதிய தகவல் | Energy Minister Regarding Fuel Supply

முறைகேடுகள் பற்றிய புகைப்படங்கள் காணொளிகள் என்பவற்றை 0742123123 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கியூ.ஆர் அட்டைகளுக்கு புறம்பாக எரிபொருள் விநியோகம் செய்தல், போலி கியூ.ஆர் அட்டை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் தொடர்பான தகவல்களை இந்த இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என அறிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.