ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான நடிகை ரோஜா, தனது தொகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் அவ்வப்போது குறைகளைக் கேட்டறிவார்.
மக்களை அவர் சந்திக்கும் போதெல்லாம் ஏதேனும் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்று சமூக வலைதளங்களிலும் வைரலாவது வாடிக்கையாகி வருகிறது. இளைஞர்களுடன் கபடி விளையாடியது, பெரியவர் ஒருவருடன் நகைச்சுவையாக உரையாடியது போன்றவை சமீபத்திய உதாரணங்கள்.
அந்த வகையில் தற்போது அவர் மக்களை சந்தித்த நிகழ்வையே கின்னஸ் சாதனையாக மாற்றியுள்ளார்.
திரைத்துறையில் கேமரா முன் தோன்றி தனது திறமையை நிரூபித்து மக்கள் மனதில் இடம் பிடித்த ரோஜாவை ஒரே நேரத்தில் 3000 புகைப்படக்கலைஞர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அது கின்னஸ் சாதனையாக அமைந்துள்ளது.
விஜயவாடாவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இதற்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. டிஜிட்டல் கேமராக்களோடு 3000 புகைப்படக் கலைஞர்கள் அங்கு ஒன்றுகூடினர்.
திருமண மண்டபத்துக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மேடையில் அமைச்சர் ரோஜா தோன்றினார். அந்நிகழ்வுக்காக காத்திருந்த புகைப்படக் கலைஞர்கள் அனைத்த்து திசையிலிருந்தும் அவரை புகைப்படங்களாக எடுத்து தள்ளினர்.
உலகில் இதுவரை பெண் அமைச்சர் ஒருவரை ஒரே நேரத்தில் மூவாயிரம் புகைப்படக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் புகைப்படம் எடுத்தது இதுவே முதன்முறையாகும்.
இதை தொடர்ந்து வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் கின்னஸ் சாதனை புத்தகம் மற்றும் இந்தியாஸ் யுனிக் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட சாதனை புத்தகங்களில் நடிகையும் அமைச்சருமான ரோஜாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. மேலும் அவருக்கு ரோஜாவுக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.