கடலூரில் குடும்பப் பிரச்னை காரணமாக 50 அடி கிணற்றில் விழுந்த பெண்..!

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே குடும்ப பிரச்னை காரணமாக கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

கோட்டக்கரை பகுதியைச் சேர்ந்த 55 வயதான சரஸ்வதி, வீட்டின் பின்புறமுள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.

கிணற்றில் குறைந்த அளவிலேயே தண்ணீர் இருந்ததால் தத்தளித்து கொண்டிருந்த மனைவியை பார்த்து அவரது கணவர் மகாலிங்கம் கொடுத்த தகவலின்பேரில் விரைந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி சரஸ்வதியை பத்திரமாக மீட்டு குறிஞ்சிபாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.