தாவணகரே : கர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவின் 75வது பிறந்த நாள் விழாவை ஒட்டி, தாவணகரேவில் நாளை நடக்கவுள்ள சித்தராமோற்சவத்தில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் பங்கேற்கிறார்.சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவின் 75வது பிறந்த நாள் விழாவை ஒட்டி, அவரது ஆதரவாளர்கள் சித்தராமோற்சவம் என்ற பெயரில் கொண்டாட உள்ளனர்.
இதற்காக தாவணகரேவில் ஷாமனுார் சிவசங்கரப்பா அரண்மனை மைதானத்தில் பிரமாண்டமான விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 12ம் தேதி பிறந்த நாள் என்றாலும், காங்கிரஸ் எம்.பி., வருகையில் அவருக்கு ஏற்ப நாளை கொண்டாடப்படுகிறது.இந்த வகையில், இன்று டில்லியில் இருந்து ஹுப்பள்ளி வரும் ராகுல், கட்சியின் அரசியல் ஆலோசனை குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். நாளை காலை 11:00 மணிக்கு நடக்கும் சித்தராமோற்சவ விழாவில் பங்கேற்கிறார்.
விழாவை ஒட்டி, தாவணகரே நகர் முழுதும் வாழ்த்து பேனர்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆறு லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளது.பிறந்த நாள் விழா வாயிலாக, தான் தான் காங்கிரசின் முதல்வர் வேட்பாளருக்கு தகுதி உடையவர் என்பதை காட்டி கொள்ள சித்தராமையா திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement