நீங்கள் வெளிநாடு செல்ல விரும்பினால் பாஸ்போர்ட் வைத்திருப்பது அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே.
வெளிநாட்டுப் பயணம் மட்டுமின்றி வேலை தொடர்பான பல விஷயங்களுக்கு உங்கள் அடையாள சான்று ஆவணமாகவும் பாஸ்போர்ட் செயல்படும்.
எனவே ஓவ்வொருவரின் அத்தியாவசிய தேவையான பாஸ்போர்ட்டை பெற்று கொள்வதும், அது காலாவதி ஆனதும் புதுப்பித்து கொள்வதும் அவசியமான ஒன்றாகும்.
உலகிலேயே சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எது தெரியுமா..?!

காலாவதி
பாஸ்போர்ட் என்பதும் மற்ற ஆவணங்களைப் போலவே ஒரு குறிப்பிட்ட செல்லுபடியாகும் காலம் இருக்கும். எனவே பாஸ்போர்ட் காலாவதி தேதிக்கு முன்னதாக புதுப்பிக்கப்பட வேண்டும். உங்கள் பாஸ்போர்ட்டை பாஸ்போர்ட் அலுவலகம் செல்லாமல் ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

ஆன்லைனில் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது எப்படி?
1. www.passportindia.gov.in என்ற அதிகாரபூர்வ பாஸ்போர்ட் சேவா இணையதளத்தில் சென்று முதலில் புதுப்பித்தலுக்கு பதிவு செய்ய வேண்டும்.
2. ஏற்கனவே இந்த இணையதளத்தில் பதிவு செய்து இருந்தால் நேரடியாக பயனர் உள்நுழைவு’ என்ற இணைப்பை பயன்படுத்தி உள்நுழையலாம்.
3: நீங்கள் ஏற்கனவே பயனராக இல்லாவிட்டால், ‘புதிய பயனர் பகுதிக்கு சென்று பதிவு செய்து கணக்கை உருவாக்க வேண்டும்.
4. இதனை அடுத்து, உங்கள் முகவரியின் அடிப்படையில் அருகிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தை தேர்வு செய்ய வேண்டும்.
5. பெயர், பிறந்த தேதி போன்ற அடிப்படை விவரங்களை அளித்து யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை உருவாக்க வேண்டும்.
6. இதனையடுத்து உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு இணைப்பு வரும். அந்த இணைப்பை பயன்படுத்தி கணக்கை செயல்படுத்த வேண்டும்.
7. பாஸ்போர்ட் கணக்கில் உள்நுழைந்ததும், ‘புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும் அல்லது பாஸ்போர்ட் புதுப்பித்தல் என்ற பகுதிக்கு செல்ல வேண்டும்.

பாஸ்போர்ட் புதுப்பிக்க தேவையான ஆவணங்கள்
பாஸ்போர்ட் புதுப்பிக்க விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பப் படிவத்துடன் கூடுதலாக ஒருசில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அந்த ஆவணங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.
1. அசல் பழைய பாஸ்போர்ட்
2. பாஸ்போர்ட்டின் முதல் இரண்டு மற்றும் கடைசி இரண்டு பக்கங்களின் அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல்
3. எமிக்ரேஷன் காசோலை தேவை (ECR)/ECR அல்லாத பக்கத்தின் சுய-சான்றளிக்கப்பட்ட நகல்

பாஸ்போர்ட் விண்ணப்பத்தை நிரப்புவது எப்படி?
1. கணக்கை உருவாக்கிய பிறகு, நீங்கள் ஆன்லைன் படிவத்தை நிரப்ப வேண்டும்.
2. ‘புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும்/கடவுச்சீட்டை மீண்டும் வழங்கவும்’ என்ற இணைப்பைக் கிளிக் செய்து படிவத்தை நிரப்பவும்.
3. படிவம் முறையாக நிரப்பப்பட்டவுடன், படிவத்தின் நகலை சேமிக்க, ‘சரிபார்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஒருமுறைக்கு இருமுறை சர்பார்த்து அதன்பின் பதிவேற்றி, ‘சமர்ப்பி’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
5. உங்கள் வசதிக்கேற்ப உங்கள் ஸ்லாட்டை முன்பதிவு செய்யவும்.
6. ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் புதுப்பித்தலுக்கு உரிய கட்டணத்தை செலுத்த வேண்டும்
7. ‘விண்ணப்பத்தின் ரசீதை தேவைப்பட்டால் பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.
How To Renew Your Passport in Online: Step-By-Step Guide Here!
How To Renew Your Passport in Online: Step-By-Step Guide Here! | காலாவதியான பாஸ்போர்ட்டை அலுவலகம் செல்லாமல் புதுப்பிப்பது எப்படி?