குஜராத்தில் பரவும் லம்பி ஸ்கின் வைரஸ்: 5000-க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழப்பு

குஜராத் மாநிலத்தில் கால்நடைகளைத் தாக்கும் தோல் கழலை நோய் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை அங்கு 5000க்கும் மேற்பட்ட இறந்துள்ளன. குறிப்பாக குஜராத்தின் கச் மாவட்டத்தில் பெருமளவில் மாடுகள் உயிரிழந்துள்ளனர். புஜ் பகுதியில் திறந்த வெளியில் ஆயிரக்கணக்கான இறந்த மாடுகளின் சடலங்கள் குவிந்து கிடக்கின்றன. ராஜ்கோட், ஜாம்நகர் பகுதிகளிலும் கால்நடைகள் இறந்து வருகின்றன. கச், புஜ், ராஜ்கோட், ஜாம்நகர் பகுதிகளில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் இறந்துபோன மாடுகளின் சடலங்கள் பொது இடங்களில் குவிந்து கிடப்பதால் மனிதர்களுக்கும் நோய் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து புஜ் முனிசிபல் நிர்வாக தலைவர் கன்ஷ்யாம் தக்கார் அளித்த பேட்டியில், நாங்கள் உடல்களை சீக்கிரமாக அப்புறப்படுத்தவே முயல்கிறோம். ஆனால் மழை தொடர்ந்து பெய்து வருவதால் குழிகள் தோண்டுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதனாலேயே சடலங்களை அப்புறப்படுத்த முடியவில்லை என்றார்.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் மட்டும் 37,000 மாடுகளுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 1010 மாடுகள் இதுவரை இறந்துள்ளன. 1.65 லட்சம் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தோல் கழலை (கட்டி) நோய் என்றால் என்ன? கால்நடைகளுக்கு தோல் கட்டி நோயை ஏற்படுத்தும் ‘லம்பி ஸ்கின் வைரஸ்’ 1920-ல் ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்டது. பின்னர் கென்யா, மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டது. கடல் மட்டத் துக்கு இணையான பிரதேசங்களில் ஈரப்பதம் அதிகம் இருக்கும்.

இப்பகுதியில் கொசுக்கள், ஈக்கள் உற்பத்தி அதிகரிக்கும். கொசு, ஈக்கள் மூலம் பரவும் இந்நோய் தற்போது இந்தியாவில் முதல்முறையாக கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய் தாக்கப்பட்ட மாடுகளின் தோலில் கட்டிகள் நிறைந்து காணப்படும். இதனால் பெரும்பாலும் இறப்புகள் ஏற்படுவதில்லை என்றபோதிலும், வெகுவாகப் பால் உற்பத்தி குறையும். மேலும் சினை பிடிக்காது, தரமான கன்றுகளையும் பிரசவிக்காது.

இந்நோய் இருக்கும் மாடுகளை மற்ற மாடுகளில் இருந்து தனிமைப் படுத்த வேண்டும். உடனடியாக அரசு கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். பெரும்பாலான வைரஸ் நோய்க்கு மருந்துகள் கிடையாது. வைரஸ் நோய்க்கு அடுத்து வரும் பாக்டீரியல் நோயால் இறப்புகள் அதிகரிக்கும்.

இதனால் பாக்டீரியல் நோயை கட்டுப்படுத்த ஊசி மருந்துகளை 3 நாட்களுக்கு செலுத்த வேண்டும். கிருமிநாசினி கொண்ட களிம்பு மருந்துகளை அந்தக் கட்டிகள் மீது தடவ வேண்டும். இந்நோய்க்கு தடுப்பூசி மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து வரவழைத்து நோய் வரும்முன் செலுத்தி பாதுகாக்க வேண்டும்.

புரட்சிகளின் பக்கவாட்டு சேதாரங்கள்: புரட்சிகள் நிகழும் போதெல்லாம் பக்கவாட்டு சேதாரங்களை தவிர்க்க இயலாது அல்லவா? அப்படித்தான் வெண்மைப் புரட்சி கொடுத்த சில சேதங்களில் ஒன்று இந்த நோய் என்ற விமர்சனமும் இருக்கின்றது. வெப்ப மண்டலப் பிரதேசங் களில் வாழும் நாட்டு மாடுகள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உடையவை. ஆனால் பால் உற்பத்தி குறை வாக இருக்கும். பாலின் தேவை அதிகரிப்பால் வெண்மைப் புரட்சி ஏற்பட்டது. இதில் அதிக பால் உற்பத்தி செய்யும் கலப்பின பசு மாடுகள் இறக்குமதி செய்யப் பட்டன. இவ்வகை பசு மாடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் கோமாரி நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு தடுப்பூசி, மருந்துகள் அளிக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஆப்பிரிக்க நாடு களில் கால்நடைகளுக்கு ஏற்பட்ட தோல் கழலை (கட்டி) நோய் சமீப காலமாக இந்தியாவிலும் அவ்வப்போது ஏற்படுகிறது. இந்தியாவில் முதல் முறையாக கடந்த 2019 ஆம் ஆண்டு கேரளாவில் கண்டறியப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.