புதுடில்லி: குரங்கம்மை நோய் பரவல் மற்றும் பாதிப்புகளை கண்காணிக்க, நிடி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தலைமையில் பணிக்குழுவை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவின் கேரளா மாநிலத்திற்கு கடந்த ஜூலை 21ம் தேதி 22 வயதுடைய இளைஞர் வந்திருந்தார். பின் அவருக்கு குரங்கம்மை நோய் அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவர் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரது ரத்த மாதிரிகள் புனே வைரஸ் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்டன.
இந்நிலையில் கடந்த ஜூலை 27ம் தேதி கடுமையான சோர்வு மற்றும் மூளைக்காய்சலுடன் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு தொற்று முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் கேரள அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும் குரங்கம்மை நோய் பரவல் மற்றும் பாதிப்புகளை கண்காணிக்க நிடி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தலைமையில் பணிக்குழுவை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இக்குழுவில் உறுபினர்களாக மத்திய சுகாதார அமைச்சகம், பார்மா மற்றும் பயோடெக் துறைகளின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement