நம்மில் பலருக்கு பிடித்த உணவாக இருப்பது பக்கோடாதான் ஆனால் இதில் அதிக எண்ணெய் இருப்பதால், அதை சாப்பிட மறுக்கிறோம். குறைந்த எண்ணெய்யில் எப்படி பக்கோடா செய்வது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த வழிமுறையை பயன்படுத்தி 3 வகையான பக்கோடா செய்து பாருங்கள்.
சில டிப்ஸ்
அதிக தீயில் எண்ணெய்யை வைக்க கூடாது. அப்படி தீயை கூட்டினால் பக்கோடா கரிந்து போய்விடும். அதிக எண்ணெய் செலவாகும். இதுபோல பக்கோடாவை வறுத்ததும், எண்ணெய் உருஞ்சும் தாளில் அதை வைக்க வேண்டும்.
பக்கோடாவை பொறிப்பதற்கு முன்பு எண்ணெய்யில் உப்பை போடுங்கள். இதனால் பக்கோடா எண்ணெய் குடிக்காது.
பிரட் பக்கோடா
பிரட் துண்டுகளை எடுத்துகொள்ளுங்கள். அதை கடலை மாவில் முக்கி பொறித்து எடுக்கவும்.
மிளகாய் பக்கோடா
பச்சை மிளகாயில், உருளைகிழங்கு மசியலை வைத்து நிரப்புங்கள். அதை கடலை மாவுக் கலவையில் முக்கி எடுத்து பொறித்துக்கொள்ளுங்கள்
பன்னீர் பக்கோடா
பன்னீரை சில துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளுங்கள். அதில் எண்ணெய் ஊற்றி மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் பொடி போட்டு கலந்துகொள்ளுங்கள். தற்போது குறைந்த எண்ணெய்யில் பொறித்து எடுங்கள்.