கூகுள், பேஸ்புக்-ஐ வரிசையில் சோமேட்டோ.. தீபிந்தர் கோயல் போடும் மாஸ்டர் பிளான்..!

உலகில் பல முன்னணி நிறுவனங்கள் தனது வர்த்தகத்தைச் சரியான முறையிலும், எளிமையாகவும் நிர்வாகம் செய்ய முக்கியமான திட்டத்தை எடுத்து வருகிறது.

இதில் முதலாவதாகக் கூகுள் பல வர்த்தகத்தைத் தனித்தனியாக நிர்வாகம் செய்தாலும் கூகுள் என்ற பெயரில் தான் வர்த்தகம் செய்து வந்தது.

ஆனால் கூகுள் -ஏ முக்கியமான வர்த்தகப் பிரிவு என்பதால் அனைத்து வர்த்தகத்தையும் ஒரு நிறுவனத்தின் கீழ், ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர திட்டமிட்டு ஆல்பபெட் என்னும் நிறுவனத்தை உருவாக்கியது. இதேபோலத் தான் பேஸ்புக் தனது கிளை நிறுவனம் அனைத்தையும் மெட்டா என்னும் நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்தது.

இதே பார்மூலா-வை தான் தற்போது சோமேட்டோ கையில் எடுத்துள்ளது.

இந்தியா தான் அடுத்த ஐரோப்பா.. கனவு திட்டத்தை தீட்டும் ரஷ்யா..!

சோமேட்டோ

சோமேட்டோ

சோமேட்டோ நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான தீபிந்தர் கோயல் புதிதாக ஒரு நிறுவன கட்டமைப்பை அறிவித்துள்ளார். அதாவது சோமேட்டோ, Blinkit, Hyperpure ஆகிய 3 நிறுவனத்திற்கும் தனித்தனி சிஇஓ அமைத்து, அனைத்து நிறுவனங்களையும் Eternal என்னும் புதிய நிறுவனத்தின் கீழ் கொண்டு வர முடிவு செய்துள்ளார்.

Eternal

Eternal

இதுக்குறித்துச் சோமேட்டோ நிறுவனர் மற்றும் சிஇஓ தீபிந்தர் கோயல் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தற்போது நாம் தனியொரு நிறுவனத்தை நிர்வாகம் செய்வதைக் கடந்து பல பெரிய நிறுவனங்களைத் தனித்தனியாக நிர்வாகம் செய்தும் அளவிற்கு முதிர்வு அடைந்து வளர்ச்சி அடைந்துள்ளோம்.

தீபிந்தர் கோயல்
 

தீபிந்தர் கோயல்

தற்போது தீபிந்தர் கோயல் கட்டுப்பாட்டின் கீழ் சோமேட்டோ, Blinkit, Hyperpure, Feeding India ஆகிய 4 நிறுவனங்கள் உள்ளது, இந்த மூன்றும் வர்த்தக அளவு மற்றும் ஆதிக்க அளவுகளில் மாறுப்படுகிறது. இந்த நிலையில் ஒரு சிஇஓ கொண்டு இயங்குவதைத் தாண்டி பல சிஇஓ-க்கள் கொண்டு இயங்கும் நிலைக்கு நிறுவன கட்டமைப்பு மாற உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

லோகோ, டிசர்ட்

லோகோ, டிசர்ட்

இதன் மூலம் புதிய நிறுவனத்தின் பெயர் Eternal, இந்தப் பெயரில் லோகோ உருவாக்கப்பட்டு, ஊழியர்களுக்கு டி-சர்ட் அளிக்கப்பட்டுக் கலக்கி வருகிறது சோமோட்டோ பங்குகள் இன்று தேசிய பங்குச்சந்தையில் 0.64 சதவீதம் சரிந்து 46.50 ரூபாயாக உள்ளது.

சோமேட்டோ பங்குகள்

சோமேட்டோ பங்குகள்

சோமேட்டோ ஐபிஓவிற்கு முந்தைய பங்குதாரர்களுக்கான (ப்ரோமோட்டர்கள், ஊழியர்கள் மற்றும் பிற நிறுவனங்கள்) லாக்-இன் காலம் முடிவடைந்ததால், ஜூலை 25ஆம் தேதி Zomato பங்குகள் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தன. சோமேட்டோ பங்குகள் கிட்டத்தட்ட 12 சதவீதம் சரிந்து ஒரு பங்கு விலை 46 ரூபாய் வரையில் சரிந்தது.

ஜெர்மனி-யை புலம்பவிட்ட ரஷ்யா.. எரிவாயு வைத்து கேம் ஆடும் விளாடிமிர் புதின்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Zomato’s Deepinder Goyal forms umbrella organisation Eternal with multiple CEOs

Zomato’s Deepinder Goyal forms umbrella organisation Eternal with multiple CEOs கூகுள், பேஸ்புக்-ஐ வரிசையில் சோமேட்டோ.. தீபிந்தர் கோயல் போடும் மாஸ்டர் பிளான்..!

Story first published: Monday, August 1, 2022, 20:37 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.