கொழும்பு: நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்து இருக்கும் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப இது சரியான நேரம் இல்லை என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார தெருக்கடி காரணமாக, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின் அவர் சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். அவரது விசா ஜூலை 28ம் தேதி முடிந்தது. அந்நாட்டு அரசு மேலும் 14 நாள் சுற்றுப்பயண விசா வழங்கியது. அவர் விரைவில் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கூறியிருப்பதாவது:
கோத்தபய வருகை அரசியல் பதற்றங்களைத் தூண்டி விடும். அவர் விரைவில் திரும்பி வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. முன்னாள் அதிபர் கோத்தபய நாடு திரும்ப இது சரியான நேரம் இல்லை. அவ்வாறு கோத்தபய நாடு திரும்பினால் அது, பொருளாதார நெருக்கடிக்கு எதிராக இலங்கையில் எரிந்து கொண்டு இருக்கும் அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் நிர்வாக ஒப்படைப்பு சிக்கல்கள் மற்றும் பிற அரசு அலுவல்களை கையாள்வதற்காக, கோத்தபய இலங்கை அரசுடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement