சீனா பொருளாதாரத்தினை பதம் பார்க்க கூடிய 5 முக்கிய காரணிகள்.. என்னென்ன தெரியுமா?

சீனாவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், அங்கு இன்னும் நிலைமை மோசமாகலாம் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

குறிப்பாக சீனாவினை பதம் பார்க்க கூடிய 5 முக்கிய காரணிகளை நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். அது என்னென்ன? ஏன் என்ன பிரச்சனை?

இதனால் சீனா பொருளாதாரம் என்னவாகும்? இதனால் மற்ற நாடுகளுக்கு ஏதும் பாதிப்பு இருக்குமா? வாருங்கள் பார்க்கலாம்.

வீட்டுக் கடனை கட்ட மறுக்க என்ன காரணம்.. சீன ஹோம்பையர்கள் சொல்லும் காரணம் என்ன?

கடன்

கடன்

சீனா வங்கிகள் கடனில் ரியல் எஸ்டேட் துறைக்கு எப்போதுமே முக்கியத்துவம் இருக்கும் என்பது அறிந்த ஒரு விஷயமே. தற்போது சீனாவில் ரியல் எஸ்டேட் துறையில் நிலவி வரும் பிரச்சனைக்கு மத்தியில்,, டெவலப்பர்களின் 39 டிரில்லியன் யுவான் மதிப்பிலான அடமான கடன் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இதே 13 டிரில்லியன் யுவான் மதிப்பிலான கடனும் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதாக சீனாவின் பீப்பிள்ஸ் வங்கி சுட்டிக் காட்டுகின்றது. இது சீனாவின் ஒட்டுமொத்த நிதியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

வங்கிகள் ரெட் லைனை தாண்டி விட்டன

வங்கிகள் ரெட் லைனை தாண்டி விட்டன

பல வங்கிகளும் தங்களது லிமிட்டினை தாண்டி அடமான கடனை வழங்கியுள்ள நிலையில் ஏற்கனவே சிலவை, அபாய கட்டத்தினை எட்டியுள்ளன. டாய்ச் அறிக்கையின் படி, மொத்த கடனில் 7% செலுத்தப்படாமல் நிலுவையில் இருக்கலாம் என்று எச்சரித்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது. சீனாவின் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், சீனா அதனை தடுக்க 10 பெரிய வங்கிகளை நிதியுதவி செய்ய கோரலாம். இது 4.8 டிரில்லியன் யுவான் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாராக்கடன் பிரச்சனை
 

வாராக்கடன் பிரச்சனை

மிகப் பெரியளவில் மோசமான கடன் எண்ணிக்கையானது அதிகரித்துள்ள நிலையில், இது இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கொரோனாவால் பின் தங்கியுள்ள வங்கிகள், மீண்டும் ரியல் எஸ்டேட் பிரச்சனையால் பின்தங்கலாம். ஜிடிபி-யில் கடன் மதிப்பு அதிகரிக்கலாம். இது இந்த ஆண்டு புதிய வரலாற்று உச்சத்தினை எட்டலாம். இது மேற்கொண்டு சீனாவின் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

மீண்டும் கடன் அதிகரிக்கலாம்

மீண்டும் கடன் அதிகரிக்கலாம்

அடமான கடன் செலுத்துவது நிறுத்தப்பட்டுள்ளதால், புதிய கடன் வழங்கலும் குறைந்துள்ளது. இது பணப்புழக்கத்தினையும் குறைத்துள்ளது. டாப் டெவலப்பர்கள் நிதி பிரச்சனை காரணமாக தங்களிடம் இருக்கும் பத்திரங்களை விற்பனை அல்லது கடனை செலுத்த தாமதிக்கலாம். இல்லையெனில் மீண்டும் கடனை அதிகரிக்கலாம். மொத்தத்தில் இதுவும் சீனாவில் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

நீடிக்கும் சரிவு

நீடிக்கும் சரிவு

தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் நடப்பு ஆண்டில் வீடு விற்பனையும் சரிவினைக் கண்டு வருகின்றது. சொத்துகளில் முதலீடு செய்வதும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் வங்கிகள் நல்ல லாபம் பார்த்தன. ஆனால் தற்போது மிகப்பெரிய அழுத்தம் கன்டுள்ளன. இது மேற்கொண்டு சீனாவினை அழுத்தம் காண வழிவகுக்கலாம். தொடர்ந்து அரசும் பொருளாதாரத்தினை மீட்க அழுத்தம் கொடுத்து வருகின்றது. இது மேற்கொண்டு பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்த கூடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

5 Major Factors Affecting China’s Economy

Here are 5 key issues to show why the crisis could escalate and undermine financial stability/சீனா பொருளாதாரத்தினை பதம் பார்க்க கூடிய 5 முக்கிய காரணிகள்.. என்னென்ன தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.