டெல்லி செல்லும் மம்தா ? காங்கிரஸ் -திரிணாமுல் சிக்கலை தீர்பாரா ?

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த வாரம் டெல்லிக்கு செல்ல இருக்கிறார். இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையே நல்லுறவு ஏற்பட இந்த சந்திப்பு வழிவகை செய்யும் என்று கூறப்படுகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு பார்த்தா சாட்டர்ஜி கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் செய்வதற்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, தற்போது அந்த மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜூலை 23-ம் தேதி கைதுசெய்தனர்.

இதைத்தொடர்ந்து  மேற்கு வங்க அமைச்சரவையிலிருந்து பார்த்தா சாட்டர்ஜி நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்த கைது நடவடிக்கையில் திரிணாமுல் காங்கிரஸின் பங்கு இருப்பதால், காங்கிரஸ் கட்சிக்கும் , திரிணாமுல் காங்கிரஸுக்கும் இடையே விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.  மேலும் மேற்கு வங்கத்தின் ஹவுரா மாவட்டத்தில் ரூ.48 லட்சம் பணத்துடன்  3 காங்கிரஸ் ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர். இதுவும் கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் எம் எல் ஏ ஜெய்மங்கல் சிங் கூறுகையில், “சமந்தபட்ட எம் எல் ஏக்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் டெல்லியில் உள்ள உயர்மட்ட பாஜகவினர் உதவியால் இதை செய்ததாவும் கூறியுள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், குஜராத் அமைச்சர் மீது, பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ்  மாநிலங்களவை  எம்பி, டிரக் ஓ பெரியன் கடந்த ஜூலை 29ம் தேதி பதிவு செய்த ட்வீட்டில், “ திங்கள்கிழமை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்திற்காக நாங்கள் காத்திருக்கிறோம். ஆளும்கட்சியினர் பெண்களை இழிவுபடுத்துவது தொடர்பாக கேள்வி எழுப்ப உள்ளோம்” என்று பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் டேக் செய்து ட்வீட் செய்துள்ளார்.

இந்நிலையில் டெல்லி செல்லும் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திப்பது தொடர்பாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.