தமிழகத்தை அதிரவைத்த கச்சநத்தம் கொலை சம்பவம்: 27பேரும் குற்றவாளிகளே – நீதிமன்றம் அறிவிப்பு

திருப்புவனம் அருகே கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த மூன்று பேர் கொலை வழக்கில் 27 பேரும் குற்றவாளிகள் என அறிவிப்பு . தண்டனை விபரங்கள் வரும் புதன்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் பட்டியலின இன சமூகத்தினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கும் அருகே உள்ளது ஆவாரங்காடு கிராமத்திற்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 28.5.2018 அன்று கச்ச நத்தம் கிராம கோவிலில் திருவிழா நடந்தது. திருவிழாவின் போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் எழுந்து, ஆவரங்காடு கிராம இளைஞர்கள் மீது பழையனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
image
இதனால் ஆத்திரமடைந்த ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரவு 9 மணி அளவில் கச்சநத்தம் கிராமத்திற்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து, வெட்டியுள்ளனர். மேலும் வீட்டில் இருந்த பொருட்களையும் அடுத்து நொறுக்கிவிட்டு தப்பியோடினர். இந்த தாக்குதலில் நிகழ்விடத்திலேயே ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய மூன்று பேர் பலியாயினர்.
இச்சம்பவம் தொடர்பாக பழையனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து 33 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த நான்கு வருடங்களாக நடந்து வந்தது. இந்நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனையொட்டி, திருப்புவனம் ,சிவகங்கை நீதிமன்ற வளாகம் ஆகிய இடங்களில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
image
குற்றவாளிகள் என சிறையில் அடைக்கப்பட்டிருந்த 27 பேர் நீதிமன்றத்திற்கு சரியாக 11:45 மணிக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், இரவு 7.40 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், வழக்கில் சம்பந்தப்பட்ட 27 பேரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தண்டனை விபரங்கள் நாளை மறுநாள் 3.8.22 புதன்கிழமை அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.