பாகிஸ்தானில் தினேஷ் கார்த்திக் பிறந்திருந்தால் அவரது வயதிற்கு உள்நாட்டு கிரிக்கெட்டில் கூட விளையாட முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சலமான் பட் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய கம்பேக் செய்ததுடன் தற்போது அணியின் தவிர்க்க முடியாத இடத்தையும் 37 வயதான தினேஷ் கார்த்திக் பெற்றுள்ளார்.
அணிக்காக போட்டியை வெற்றிகரமாக முடித்து தரும் இடத்தில் ஃபினிஷராக களமிறங்கி தினேஷ் கார்த்திக் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
உதாரணமாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 19 பந்துகளில் 41 ஒட்டங்கள் அபாரமாக குவித்து அசத்தினார்.
தினேஷ் கார்த்திக்-கின் கம்பேக் குறித்து கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் தொடங்கி முன்னாள் வீரர்கள் வரை அனைவரும் புகழ்ந்து வரும் நிலையில், இந்த வரிசையில் முன்னாள் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் பட் இணைந்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ள கருத்தில், நல்லவாய்ப்பாக தினேஷ் கார்த்திக் இந்தியாவில் பிறந்துவிட்டார். அவர் மட்டும் பாகிஸ்தானில் பிறந்திருந்தால் அவரது வயதுக்கு இங்கு உள்நாட்டு கிரிக்கெட்டில் கூட விளையாடி இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்திய அணி தற்போது மிகவும் வலுவாக உள்ளது என்பது அப்பட்டமாக தெரிகிறது, தரமான அணியை இந்தியர்கள் கட்டமைத்துள்ளனர், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், அர்ஷ்தீப் சிங், சுப்மன் கில் என திறமையான இளம் வீரர்கள் நிறைய பேர் இந்திய அணியில் நிறைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை ஷாஹீன் அஃப்ரிடியை பெரிதும் நம்பி இருக்க வேண்டிய சூழலே உள்ளது என சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் 27ல் தொடங்கி செப்டம்பர் 11 வரை அமீரகத்தில் நடைபெறயுள்ள ஆசிய கோப்பை தொடரில் பலப்பரீட்சை செய்யுள்ளன என்பது குறிப்பிடதக்கது.
கூடுதல் செய்திகளுக்கு: வெளியேறியது உக்ரைனின் முதல் தானிய கப்பல்: வீடியோ ஆதாரம்!
இந்தநிலையில் தினேஷ் கார்த்திக் குறித்து சல்மான் பட்டின் இந்த பாராட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளது.