தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தொழில் போட்டி காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் கூலிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். அங்குள்ள மாதாப்பூர் என்ற இடத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இஸ்மாயில் என்பவரை, அண்மையில் சிறையிலிருந்து வெளிவந்த சாதிக் பாட்சா மற்றும் கூட்டாளிகள் மூன்று பேர், வீட்டில் இருந்து வெளியே வந்த போது துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் அந்த இடத்திலேயே இஸ்மாயில் உயிரிழந்தார். காயமடைந்த மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய சாதிக் பாட்சா மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.