நடப்பாண்டே தேர்தல்: குமாரசாமி கணிப்பு| Dinamalar

பீதர் : இன்றைய அரசியல் சூழ்நிலையை கவனித்தால், கர்நாடகாவில் 2023 ஏப்ரலுக்கு பதில், நடப்பாண்டு டிசம்பருக்குள் சட்டசபை தேர்தல் நடக்கும். முதல்வர் பசவராஜ் பொம்மை பதவி காலத்தை நிறைவு செய்ய வாய்ப்பில்லை,” என ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.

பீதரில் அவர் கூறியதாவது:கர்நாடகாவில், முன்கூட்டியே சட்டசபை தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதால், ம.ஜ.த., ஏற்கனவே தன் வேட்பாளர்களை தேர்வு செய்ய துவங்கியுள்ளது. எங்களின், பஞ்சரத்னா’ திட்டம் குறித்து, வரும் மாதம் அறிவிக்கப்படும். இந்த திட்டம் கல்வி, சுகாதாரம், குடியிருப்பு, விவசாயிகளின் நலன், சமூக பாதுகாப்பு திட்டங்கள் உட் கொண்டதாகும்.

ம.ஜ.த., பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர மக்கள் ஆதரிக்க வேண்டும். மாநிலத்தின் வளர்ச்சிக்கு, தேவையான அனைத்து வளங்களும் உள்ளன. எதற்காகவும் மத்திய அரசிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை. விவசாயிகளின் கடனை ரத்து செய்வது, பிரச்னைக்கு நிரந்தர தீர்வாகாது. விவசாயிகளின் கடன் சுமையை குறைக்க முயற்சிப்போம்.கர்நாடகாவில் திறமையான போலீஸ் அதிகாரிகள் உள்ளனர்.

பிரவீன் கொலை வழக்கை, தேசிய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்ததன் மூலம், மாநில அரசு தன் பொறுப்பிலிருந்து நழுவ முயற்சிக்கிறது.இன்றைய அரசியல் சூழ்நிலையை கவனித்தால், கர்நாடகாவில் 2023 ஏப்ரலுக்கு பதில், நடப்பாண்டு டிசம்பருக்குள் சட்டசபை தேர்தல் நடக்கும்.முதல்வர் பசவராஜ் பொம்மை பதவி காலத்தை நிறைவு செய்ய வாய்ப்பில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.