பிஸ்னோய் கும்பலிடமிருந்து வந்த கொலை மிரட்டலைத் தொடர்ந்து, நடிகர் சல்மான் கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள மும்பை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவை கொலை செய்த பிஸ்னோய் கும்பல் அண்மையில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கடிதம் வாயிலாக கொலை மிரட்டல் விடுத்திருந்தது. அந்த மிரட்டல் கடிதத்தில், சித்து மூஸ்வாலாவுக்கு ஏற்பட்ட கதியை சந்திப்பீர்கள் என கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து சல்மான் கான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதனிடையே சல்மான் கான் கடந்த ஜூலை 22ம் தேதி மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் சென்று துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான லைசென்ஸ் கேட்டு விண்ணப்பத்தைக் கொடுத்தார். இந்நிலையில் நடிகர் சல்மான் கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள மும்பை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் நடிகர் சல்மான் கான் தான் வழக்கமாக பயன்படுத்தும் காரை குண்டுகள் துளைக்காதவாறு புல்லட் ப்ரூப் கண்ணாடிகளைக் கொண்டு பொறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்கலாம்: ”பொன்னி நதி பாக்கணுமே..பொழுதுக்குள்ள!” ஏ.ஆர்.ரகுமான் குரலில் வெளியானது “பொன்னி நதி” பாடல்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM