டெல்லி: 11 வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்து இன்று விவாதம் நடைபெறும் நிலையில் எதிர்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவையும், மாநிலங்களவையும் ஆகிய இரு அவைகளும் தினம்தோறும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறன. இந்த சூழ்நிலையில் இன்று 11வது நாளாக நாடாளுமன்றம் முடங்கி இருக்கிறது. சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் விடுமுறை என்பதால் அதன்பின் அவை இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடின. அந்த சமயத்தில் எதிர் கட்சிகள் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்ட தொடங்கி விட்டனர். மாநிலங்களவையில் முழக்கங்கள் எடுத்த உடனே எதிர்கட்சிகள் பலமுறை அவை தலைவர் வெங்கையா நாயுடு கோரிக்கை வைத்தும் அதை ஏற்று கொள்ளாததால் உடனடியாக அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவையில் சிவசேனா, சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதால் விவாதம் தேவையென அதே கட்சியை சேர்ந்த பிரியங்கா சந்துருவேதி ஒத்திவைப்பு தீர்மானம் அளித்திருக்கிறார். அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்ற மத்திய அரசு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்றும், அது குறித்து பிற அலுவலகங்களை குறித்து விவாதம் நடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல ஆம் ஆத்மி கட்சி விலைவாசி உயர்வு குறித்து கோரிக்கை வைத்துள்ளார். இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை எதிர் கட்சிகள் வலியுறுத்தி உள்ளதால் அவை நடவடிக்கைகள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டது. நண்பகல் 12 மணிக்கு மீண்டும் அவை கூடிய போது எதிர் கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்ததால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் முடங்கி இருக்கிறது. விலைவாசி குறித்து போன்ற பல பிரச்சனைகளை எதிர் கட்சிகள் எழுப்பி வருகின்றன, அனால் அவர்களின் கோரிக்கைகளை எடுத்து விசாரிக்க சபா நாயக்கர் தொடர்ந்து மறுத்து வருவதால் அவையில் கூச்சல், குழப்பம் நீடித்தது. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 11 வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.