’நீங்கள் பாதிக்கப்பட்டவர் இல்லை; அதனால் உத்தரவிடமுடியாது’.. நீதிமன்றம் சொன்ன விநோத காரணம்!

மனிதக் கழிவை மனிதனே அகற்றுவதை தடுக்கும் தனிப்பட்ட சட்டங்கள் இருந்தும் கழிவை அகற்றும் பணியின் போது மனித மரணங்கள் ஏற்படுவது எதனால் என்பதையும் அதனைச்சார்ந்த சட்ட வழிமுறைகள் சரியாக செயல்படுகிறதா என்ற அறிக்கையையும் அறிவிக்க உத்தரவிடக் கோரி மதுரை யாகப்பா நகரைச் சார்ந்த இருளாண்டி என்பவர் மனு ஒன்றை மதுரைக்கிளை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
கடந்த 1994 ஆம் ஆண்டு மனித கழிவை மனிதனே அகற்றும் அவலத்தை தடுத்து நிறுத்தும் பொருட்டு தேசியத் தூய்மை பணியாளர் ஆணையம் உருவாக்கப்பட்டது. பின்னர் 2013ஆம் ஆண்டு தான் மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடுத்து சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டது. மேலும் கடந்த 2018-19ம் ஆண்டில் தூய்மை இந்தியா திட்டத்திற்காக 15,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது.
image
தமிழகத்தில் துப்புரவு பணியில் உள்ளாட்சிகளில் மட்டும் 35 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடுக்கும் சட்டங்கள் இருந்தும் அதனை அகற்றும் பொருட்டு ஏற்படும் மரணங்கள் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கின்றன. அதனை சார்ந்து வழங்கப்படும் இழப்பீடும் முறையாக பின்பற்றப்படவில்லை எனவே சட்ட வழிமுறைகள் சரியாக தான் பின்பற்றப்படுகிறதா என்னும் உண்மை நிலையை அறிக்கையாய் சமர்பிக்கவேண்டும் என்ற கோரிக்கை மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், வழக்கை தொடர்ந்த மனுதாரர் பாதிக்கப்பட்டவர் இல்லை என்றும் அதன்பொருட்டு இந்த உத்தரவை பிறப்பிக்க முடியாது என்றும் மனுவை விசாரித்த நீதிமன்ற அமர்வு வழக்கை ரத்து செய்து முடித்து வைத்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.