அவுஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது நீண்ட நாள் காதலியான பெக்கி பாஸ்டனை திருமணம் செய்துகொண்டார்.
பேட் கம்மின்ஸ் – பெக்கி பாஸ்டன் ஜோடி எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக டேட்டிங் செய்து வந்தனர். இவர்களது திருமண நிச்சயதார்த்தம், கடந்த 2020ஆம் ஆண்டு நடந்தது.
ஆனால், கோவிட் – 19 தொற்று காரணமாக இவர்களது திருமணம் தடைபட்டது.
எனினும் ஒன்றாக வாழ்ந்து வந்த இந்த தம்பதிக்கு ஆல்பி என்ற ஒன்பது மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், சூலை 29ஆம் திகதி பேட் கம்மின்ஸ் – பெக்கி பாஸ்டன் ஜோடிக்கு Chateau Du Soleil-யில் பிரம்மாண்டமான முறையில் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலை நடந்தது.
இருவரும் தங்கள் திருமண புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். கிரிக்கெட் உலகில் இருந்தும், ரசிகர்களிடம் இருந்தும் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
PC: Twitter
பிரித்தானியாவைச் சேர்ந்த பெக்கி பாஸ்டன், உள்கட்டமைப்பு வடிவமைப்பாளராக உள்ளார். மேலும் ஆடம்பரமான வீட்டு அலங்காரங்களை விற்கும் ஒன்லைன் ஸ்டோரை நடத்தி வருகிறார்.
Source: Supplied
அவுஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் 29 வயதாகும் பேட் கம்மின்ஸ், 43 டெஸ்ட் போட்டிகளில் 199 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
https://www.sakshi.com/