பணி நீக்கமா.. முக்கிய அப்டேட் கொடுத்த கூகுள் நிறுவனம்.. ஊழியர்கள் அச்சம்!

கூகுள் நிறுவனம் எதிர்பார்த்ததை காட்டிலும் பலவீனமான வளர்ச்சியினை கண்டுள்ளது. இதற்கிடையில் கூகுள் நிறுவனத்தில் நடந்த வழக்கமான கூட்டத்தில், ஊழியர்கள் பணி நீக்கம் குறித்த கவலையினை எழுப்பியுள்ளனர்.

நடப்பு ஆண்டில் இதுவரையில் பணி நீக்கம் எதுவும் இல்லை. நாங்கள் தற்போது ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கவில்லை. ஆனால் பொருளாதாரம் மெதுவான வளர்ச்சியினை கண்டு வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

10 வயதில் ஒரு குட்டி கோடீஸ்வரர்… பல கோடிக்கு அதிபதியான ஆச்சரியம்!

குறைக்கும் எண்ணம் இல்லை

குறைக்கும் எண்ணம் இல்லை

இது குறித்து தலைமை மனிதவள அதிகாரி கூறுகையில், நாங்கள் தற்போது வரையில் ஊழியர்களை குறைக்கும் எண்ணத்தில் இல்லை. ஆனால் பொருளாதாரம் மெதுவான வளர்ச்சியினை கண்டு வருகின்றது என்ற கவலையும் எழுப்பியுள்ளார்.

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

இதே கூகுளின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, ஊழியர்களின் உற்பத்தி திறன் மற்றும் கவனம் குறித்து கவலை எழுப்பியுள்ளார். எதிர்பார்த்ததை விட இரண்டாவது காலாண்டில் மெதுவான வளர்ச்சியினை கண்டுள்ளோம். ஊழியர்கள் அவர்களது உற்பத்தி திறனை மேம்படுத்த வேண்டும் என்பதை தெரிவித்துள்ளார்.

உற்பத்திதிறன் குறைந்துள்ளது?
 

உற்பத்திதிறன் குறைந்துள்ளது?

சுமார் 1,70,000 பேருக்கு மேலாக கலந்து கொண்ட முழு நேர கூகுள் பணியாளர்கள், நிறுவனத்தின் உற்பத்தி திறன் அதன் ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இல்லை என தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு முடிவு வெளியானதை தொடர்ந்து, ஊழியர்கள் வருவாயை மேம்படுத்த உதவி புரிய வேண்டும். இது நாம் எந்தளவுக்கு சவால்களை எதிர்கொண்டு வருகிறோம் என உணர்த்துகின்றது. இது சர்வதேச அளவில் நிலவி வரும் அசாதாரணமாக நிலைக்கு மத்தியில் வளர்ச்சி விகிதமானது சரிவினைக் கண்டுள்ளது.

கவனமாக இருங்கள்

கவனமாக இருங்கள்

50 வயதான சுந்தர் பிச்சை, கவனச் சிதறல்களை குறைத்து, அதிக வாடிக்கையாளர்கள் குறித்து கவனம் செலுத்துங்கள், நமது பொருட்களில் அதிக கவனம் செலுத்துங்கள் என்று ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் நான் உங்கள் அனைவரின் உதவி குறித்து விரும்புகிறேன். உங்களது திட்டங்களை எங்களுடன் பகிருங்கள் எனவும், இது குறித்த ஆய்வுக்கான பதிலை ஆகஸ்ட் 15 வரை பகிருங்கள் என அறிவித்துள்ளார்.

சர்வே

சர்வே

இந்த ஆய்வில் பயனர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவை செய்ய அதிக தெளிவு மற்றும் செயல்திறனுடன் பணியாற்ற உங்களுக்கு எது உதவும்? சிறந்த முடிவுகளை பெற என்ன செய்ய வேண்டும், அதற்கான தடைகளை எப்படி அகற்ற வேண்டும்? வளர்ச்சியில் எப்படி கவனம் செலுத்துவது என பல கேள்விகள் இடம்பெற்றுள்ளனவாம்.

பணி நீக்கம் குறித்து?

பணி நீக்கம் குறித்து?

பணி நீக்கம் குறித்து கேட்டபோது, தற்போதைய சூழலில் பணி நீக்கம் செய்யும் எண்ணம் எதுவும் இல்லை. எனினும் ஊழியர்கள் கவனமுடன் பணிபுரிய வேண்டும். ஏனெனில் பொருளாதாரம் எப்படி மாறும் என்பது தெளிவாக தெரியவில்லை. எனினும் தற்போதைக்கு பணி நீக்கம் இல்லை என இந்த நிறுவனத்தின் மனிதவள அதிகாரி கூறியுள்ளது நினைவுகூறத்தக்கது.

கேள்வி?

கேள்வி?

ஆக மொத்தத்தில் தற்போதைய சூழலில் பணி நீக்கம் என்பது தற்போதைக்கு இல்லை என்பது நல்ல செய்தி தான் என்றாலும், பொருளாதாரம் இன்னும் மோசமான நிலையை எட்டினால் நிறுவனம் என்ன செய்யும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Google Sundar Pichai has said that employees should improve their productivity

Google Sundar Pichai has said that employees should improve their productivity/பணி நீக்கமா.. முக்கிய அப்டேட் கொடுத்த கூகுள் நிறுவனம்.. ஊழியர்கள் அச்சம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.