இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) உமர் பாரூக் புர்கி, 2022 ஜூலை 29ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அபிவிருத்தியடைந்து வரும் இருதரப்பு உறவுகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்துரையாடியதுடன், பல துறைகளில் நடைபெற்று வரும் ஒத்துழைப்பு குறித்து திருப்தியை வெளிப்படுத்தினார். இரு வழி உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறையாக மக்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கு அவர்கள் தீர்மானித்தனர்.
பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச அரங்குகளில் கடினமான காலங்களில் பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கிய உறுதியான மற்றும் நிலையான ஆதரவை அமைச்சர் பாராட்டினார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 ஜூலை 31