பின்லேடன் சகோதரர்களிடம்ரூ.10 கோடி பெற்றாரா சார்லஸ்| Dinamalar

லண்டன்: அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர்மறைந்த ஒசாமா பின்லேடன் சகோதரர்களிடம்பிரிட்டன் இளவரசர் சார்லஸ் 10 கோடி ரூபாய் பெற்றதாக பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் 2001ல் நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமானவர் அல் – குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன். இவரை 2011ல் அமெரிக்க அதிரடிப் படை பாகிஸ்தானில் சுட்டுக் கொன்றது.இந்நிலையில் பின்லேடனின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் பக்ர் பின் லேடன் ஷாபிக் ஆகியோரிடம் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் 10 கோடி ரூபாய் பெற்றதாக ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

‘பயங்கரவாத அமைப்பைசேர்ந்தவர்களிடம் சார்லஸ் தலைமையிலான அறக்கட்டளை நன்கொடை பெறலாமா’ என பிரிட்டன் பத்திரிகைகள் காட்டமாக செய்தி வெளியிட்டுள்ளன.இது தொடர்பாக சார்லஸ் அறக்கட்டளை தலைவர் சர் அயன் செஷர் கூறியதாவது:பின்லேடனுக்கும் அவரது உறவினர்களுக்கும் 1994 முதல் எந்த தொடர்பும் இல்லை. பின்லேடன் சகோதரர்கள் சார்லஸ் அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தது உண்மை.

பின்லேடன் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக நன்கொடை தந்திருக்கலாம். இந்த பணம் சட்டப்படி உரிய விதிமுறைகளை பின்பற்றி பெறப்பட்டுள்ளது.அனைத்து அமைப்புகளிடம் தெரிவித்து ஒப்புதல் வாங்கப்பட்டுள்ளது. எல்லாம் வெளிப்படையாக நடந்துஉள்ளது. இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. இந்த நன்கொடையை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்குவது ஏன் எனத் தெரியவில்லை.இவ்வாறு அவர்தெரிவித்துள்ளார்.சார்லஸ் அறக்கட்டளை பிரிட்டனில் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் திட்டங்களுக்கு நன்கொடை அளித்து வருகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.