தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த படிப்புகளான பி.ஃபார்ம், பி.எஸ்.சி. நர்சிங், டிப்ளமோ இன் சைக்கியாட்ரி உள்ளிட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் மருத்துவக் கல்வி இயக்ககம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது . அதில் , 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள் , பி . பார்ம் . ( லேட்டரல் என்டிரி ) படிப்பு , போஸ்ட் பேசிக் பி . எஸ் . சி . நர்சிங் படிப்பு & போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் சைக்கியாட்ரி நர்சிங் படிப்பு , பெண்களுக்கான செவிலியர் பட்டயப்படிப்பு , மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு ஆகிய படிப்புகளில் சேருவதற்காக ஆன்லைனில் விண்ணப்பங்கள் இன்று முதல் வரவேற்கப்படுகின்றன .
இது குறித்த மேலதிக தகவல்களை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கி வரும் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.