புதுக்கோட்டை : புதுக்கோட்டை கோயில் தேர் கவிழ்ந்த விபத்து தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான விவகாரத்தில் தேரை வழிநடத்திய திருகோகர்ணம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், வைரவன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
