இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கிள் டிராக் என்கிற முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதி பிரபலமான பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பார்த்திபன், ஜெயராம், சரத்குமார் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் முதல் சிங்கிள் டிராக் ஜூலை 31 ஆடித் திருநாளில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் 2 பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கிறது. பொன்னியின் செல்வனில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி,பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதால், படத்தின் பின்னணி இசை மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பொன்னியின் செல்வன் நாவல் மக்கள் மத்தியில் பிரபலமான நாவல் என்பதாலும் அதை இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஒரு பெரிய நட்சத்திர நடிகர்கள் பட்டாளம் நடிப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தச் சூழலில், படத்தில் இடம்பெற்றிருக்கும் பொன்னி நதி பாடல் இன்று வெளியிடப்பட்டது. பொன்னி நதி பாடல் வெளியீட்டு நிகழ்வு தனியார் மால் ஒன்றில் பிரமாண்டமாக நடந்தது. இதில், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் கலந்துகொண்டனர். பாடலானது அந்த மாலில் வைக்கப்பட்டிருந்த ஸ்க்ரீனில் ரசிகர்கள் முன்னிலையில் ஒளிபரப்பப்பட்டது.
‘காவிரியாள் நீர் மடிக்கு’ என்று தொடங்கும் பாடலில், நீர் சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிற்கும், உளி சத்தம் கேட்டதுமே கல் பூத்து நிற்கும், சோழத்தின் பெருமை கூற சொல் பூத்து நிக்கும் என சோழ தேசத்தின் பெருமையையும், பொன்னி நதி பெருமையையும் வந்தியத்தேவன் பாடும்படி வரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏ.ஆர். ரஹ்மான் பாடியிருக்கும் இப்பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருக்கிறார். ‘பொன்னி நதி பார்க்கணுமே’ என்ற பாடல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“