ஜபல்பூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 நோயாளிகள் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிலர் காயத்துடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மத்திய பிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் இன்று பிற்பகல் திடீரென தீ பிடித்து, மற்ற வார்டுகளுக்கு பரவியது. இந்த விபத்தின் காரணமாக, தீவிர சிகிச்சை பிரிவு கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த தீ விபத்து தீ விபத்தில் சிக்கி 10 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜபல்பூர் எஸ்பி சித்தார்த் பஹகுனா, ஜபல்பூரில் உள்ள கோஹல்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாமோ நாக்கா அருகே உள்ள நியூ லைஃப் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மதியம் தீ விபத்து ஏற்பட்டது. ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவம், தீ விபத்தில் 9-10 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார். மேலும் பலர் மருத்துவமனையில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாகவும். தீயை அணைக்கும் பணிகளை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
இந்த தீவிபத்து குறித்துதகவல் அறிந்ததும் விரைந்து வந்த தேசிய பேரிர் ஆணையம், மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து கூறிய தேசிய பேரிடர்குழுவைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் குப்தா, எங்கள் குழுவினர் உடனடியாக தீ விபத்து நடந்த இடத்திற்கு வந்தனர். தேடுதல் பணியை முடித்துவிட்டோம், உள்ளே யாரும் சிக்கவில்லை. இந்த தீவிபத்தில் மருத்துவமனையின் முதல் தளம் முற்றிலும் சேதமடைந்துள்ளது” என்று கூறினார்