மலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் கும்பாவுருட்டி அருவியில் வெள்ளம் பெருக்கு : மதுரையைச் சேர்ந்த குமரன் என்பவர் வெள்ளத்தில் சிக்கி பலி….

திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கும்பாவுருட்டி அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி மதுரையைச் சேர்ந்த சுற்றுல்லா பயணி ஒருவர் மரணமடைந்துள்ளார். கொல்லம் அடுத்த அச்சன் கோயிலில் புகழ் பெற்ற கும்பாவுருட்டி அருவியில் கொட்டும் தண்ணீரை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதியளித்ததை தொடர்ந்து சுமார் 30 சுற்றுல்லா பயணிகள் குளித்து கொண்டிருந்தன. அப்போது அருவியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கும்பாவுருட்டி அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிலர் அடித்து செல்லப்பட்டனர். 25 பயணிகள் அங்கிருந்த பாறை இடுக்கில் சிக்கிக்கொண்டனர். இதனிடையே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மதுரையை சேர்ந்த குமரன், கிஷோர் ஆகியோரை மீட்ட வனத்துறையினர் குமாரனை தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிஷோர் என்பவரை கேரள மாநிலம் புனலூர் தாலுக்கா மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி குமரன் மரணமடைந்தார். மிகவும் ஆபத்தான நிலையில் கிஷோர் என்பவர் சிகிச்சை பெற்றுவருகிறார். இதனிடையே பாறைகளில் சிக்கி இருந்த 25 சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.