மீண்டும் விக்ரமை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தற்போது விக்ரம் நடித்துள்ள கோப்ரா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. கோப்ரா படத்தை தொடர்ந்து மீண்டும் விக்ரம் நடிக்கும் புதிய படத்தை அஜய் ஞானமுத்து இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் விக்ரம் அந்த படத்தை முடித்ததும் அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் நடிப்பார் என தெரிகிறது.