வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி தேதி என வருமான வரித்துறை அலுவலகம் அறிவித்திருந்த நிலையில் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 44 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் நேற்றுடன் வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இதுவரை எத்தனை பேர் வருமான வரி தாக்கல் செய்து உள்ளார்கள் என்பதை பார்ப்போம்.
ITR 2022: வருமான வரி தாக்கலுக்கு அவசியம் இந்த 10 ஆவணங்கள் தேவை.. !

2022-23 வருமானவரி தாக்கல்
2022-23ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய கடைசி தேதியான நேற்று மாலை 6 மணி வரை இந்தியா முழுவதும் மொத்தம் 5.54 கோடி வருமான வரி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனாலும் வருமானவரித்துறை கால அவகாசத்தை நீட்டிக்கவில்லை.

5.54 கோடி வருமான வரி தாக்கல்
நேற்று மாலை மாலை 5 மணி முதல் 6 மணி வரை 5 லட்சத்துக்கும் அதிகமான ரிட்டர்ன்களும்,12 முதல் 1 மணி வரை 4.67 லட்சம் ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஜூலை 30ஆம் தேதி 57.51 லட்சத்துக்கும் அதிகமான ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஜூலை 29ஆம் தேதி 43 லட்சமாகவும், ஜூலை 28ஆம் தேதி 36 லட்சத்துக்கும் அதிகமாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் நாடு முழுவதும் 5.54 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்.

அபராதம்
உரிய தேதிக்கு முன் தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. அதன்படி இன்று முதல் ரூ.5 லட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.5,000 அபராதமும், ரூ.5 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர்கள் ரூ.1,000 அபராதமும் செலுத்தி டிசம்பர் 31க்குள் வருமானவரி தாக்கல் செய்து கொள்ளலாம்.

1 சதவீத வட்டி
டிசம்பர் 31ஆம் தேதிக்கு பிறகு ரிட்டன் தாக்கல் செய்தால் மாதத்துக்கு 1 சதவீத வட்டி விதிக்கப்படும். நிலுவைத் தேதி. வரி செலுத்துவோர் ஐடி சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவுக்குப் பிறகு ஐடிஆரை வழங்கினால், எந்தத் தலைப்பின் கீழும் தங்கள் இழப்பை முன்னெடுத்துச் செல்லத் தகுதி பெற மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
More than 5.54 crore IT accounts have been filed, 44 lakh on last day!
More than 5.54 crore IT accounts have been filed, 44 lakh on last day! | முடிந்தது கடைசி தேதி… ஐடிஆர் தாக்கல் செய்தவர்கள் எவ்வளவு பேர்?