பாடசாலை மாணவர்களுக்கான புதிய பஸ் சேவை இன்று முதல் ஆரம்பமாகிறது.
இதன்படி, முதற்கட்டமாக மேல் மாகாணத்தை கேந்திரமாகக்கொண்டு இந்த பஸ் சேவை இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் கலாநிதி நிலான் மிரண்டா தெரிவித்தார்.
கம்பஹா, ஹொரணை, களுத்துறை ஆகிய பிரதேசங்களில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்காக இந்த பஸ் சேவை முதற்கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
பாடசாலை மாணவர்களின் போக்குவரத்திற்காக இன்றில் இருந்து மேலும் 40 பஸ் கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தற்சமயம் சிசுசெரிய பஸ் சேவைகளுக்கு மேலதிகமாக இவை சேவையில் இணைத்துக்கொள்ளப்படும். புதிய சேவைகளுக்கான பஸ் கட்டணம் பொதுவான பஸ் கட்டணமாகவே இருக்கும்.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பஸ்கள் 50 சதவீதமானவையே சேவையில் ஈடுபட்டிருப்பதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.