இந்திய ரீடைல் சந்தை விரைவில் 1 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை எட்டும் நிலையில் ஆன்லைன் ரீடைல் வர்த்தகப் பிரிவில் சுமார் 80 சதவீத வர்த்தகத்தை நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களாக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் கையில் மட்டுமே உள்ளது.
இந்தியாவின் ரீடைல் விற்பனை சந்தையை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டமிட்டு வரும் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களின் ஆதிக்கத்தைத் தகர்க்கவும், மோனோபோலி பணிகளை வேரோடு பிடுங்கி எடுக்க மத்திய வர்த்தக அமைச்சகம் கொண்டு வந்த திட்டம் தான் ஓபன் நெட்வொர்க் பார் டிஜிட்டல் கட்டமைப்பு.
இந்தக் கட்டமைப்பில் தற்போது முகேஷ் அம்பானியின் Grab.in நிறுவனம் இணைந்துள்ளது.
டீ கடை முதல் காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வரை… ஒரு விளையாட்டு வீரரின் வெற்றிகதை!
ONDC நெட்வொர்க்
மோடி அரசின் Open Network for Digital Commerce (ONDC) நெட்வொர்க்-ல் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் கீழ் இருக்கும் Grab.in என்ற டெலிவரி சேவை நிறுவனம் இணைந்துள்ளது. இதன் மூலம் இத்தளத்தில் இருக்கும் விற்பனையாளர்கள் அனைவருக்கும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய முடியும்.
ரிலையன்ஸ் ரீடைல்
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் Grab.in நிறுவனத்தில் சுமார் 80 சதவீத பங்குகளை வைத்துள்ளது, 2019ல் இந்நிறுவனத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கைப்பற்றியது. ரிலையன்ஸ் ரீடைல் ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் இருக்கும் DUNZO நிறுவனத்தை ONDC நெட்வொர்க்-ல் சேர்த்துள்ளதால் சப்ளை செயின் பிரிவில் முக்கியப் பங்கு வகிக்க உள்ளது ரிலையன்ஸ்.
Grab.in மற்றும் DUNZO
ONDC நெட்வொர்க் தற்போது 6 பெரு நகரங்களில் மளிகை பொருட்கள், சிறிய பேக்கரி பொருட்களுக்கான ஆர்டர் எடுத்து, டெலிவரி செய்யும் பணிகளைச் சோதனை செய்து வருகிறது. மேலும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் Grab.in மற்றும் DUNZO ஹைப்பர்லோக்கல் டெலிவரியில் சிறப்பான சேவை அளித்து வருகிறது.
ஓபன் நெட்வொர்க் பார் டிஜிட்டல் காமெர்ஸ்
ஓபன் நெட்வொர்க் பார் டிஜிட்டல் காமெர்ஸ் கட்டமைப்பு என்பது அனைத்து விதமான வர்த்தகம், சேவை, பணப் பரிமாற்றம் ஆகியவற்றை ஒரே டிஜிட்டல் அல்லது எலக்ட்ரானிக் நெட்வொர்க் கீழ் கொண்டு வரும் ஒரு திட்டம். இந்த நெட்வொர்க் ஓபன் சோர்ஸ் மெத்தட் மற்றும் ஓபன் நெட்வொர்க் ப்ரோடோகால் மூலம் உருவாக்கப்பட உள்ளது
ஈகாமர்ஸ் சந்தை
இந்தக் கட்டமைப்பு வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் ஒரு பாலமாக இருப்பது மட்டும் அல்லாமல் ஈகாமர்ஸ் சந்தையில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை எளிதாக இணைய முடியும். இதனால் அமேசான் பிளிப்கார்ட் மட்டுமே ஈகாமர்ஸ் துறை வர்த்தகத்திற்கு இந்திய நிறுவனங்கள் நம்பியிருக்கத் தேவையில்லை.
ஈகாமர்ஸ்
மத்திய அரசு டிஜிட்டல் பேமெண்ட் சேவைக்கு எப்படி யூபிஐ சேவையோ, அதேபோலத் தான் ஈகாமர்ஸ் துறைக்கு இந்த ONDC நெட்வொர்க். இந்தத் தளத்தில் இணையும் எந்த ஒரு நிறுவனமும் தனது பொருட்களையும், சேவையை இந்திய மக்களுக்கு அளிக்க முடியும், என்பதால் இது மிகப்பெரிய தாக்கத்தை இந்திய ரீடைல் சந்தையில் ஏற்படுத்த உள்ளது.
Reliance Industries owned Grab.in integrates with modi government’s ONDC network
Reliance Industries owned Grab.in integrates with modi government’s ONDC network மோடி அரசின் புதிய ONDC நெட்வொர்க்-ல் இணைந்த ரிலையன்ஸ் நிறுவனங்கள்.. இனி வேற லெவல்..!