யுவ மோர்ச்சா தலைவர் பதவி; பா.ஜ., – எம்.பி.,க்கு நெருக்கடி

பெங்களூரு : அரசு மற்றும் கட்சிக்கு, தர்மசங்கடத்தை ஏற்படுத்தும், பா.ஜ., தேசிய யுவ மோர்ச்சா தலைவர் பதவியிலிருந்து, பெங்களூரு தெற்கு எம்.பி., தேஜஸ்வி சூர்யாவை நீக்கும் வாய்ப்புள்ளது.தட்சிண கன்னடா, சுள்ளியாவில் பா.ஜ., தொண்டர் பிரவீன், கொலை நடந்த போது, கட்சி தொண்டர்கள் கொதிப்படைந்து போராட்டத்தில் குதித்தனர்.

பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி., தேஜஸ்வி சூர்யா, ‘காங்கிரஸ் அரசு இருந்திருந்தால், கல்லெறிந்திருக்கலாம். ஆனால் நமது அரசு உள்ளதால், எதையும் செய்யும் சூழ்நிலையில், நாம் இல்லை’ என, கூறி, தொண்டர்களை சமாதானம் செய்ய முயற்சித்தார்.இவரது பேச்சு சர்ச்சைக்கு காரணமானது. இதை தீவிரமாக கருதிய பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா அதிருப்தியடைந்தனர்.பொறுப்பான எம்.பி., பதவியில் இருந்து கொண்டு, இது போன்று பேசுவது, தேஜஸ்வி சூர்யாவின் தகுதிக்கு அழகல்ல. பா.ஜ., தேசிய யுவ மோர்ச்சா தலைவராக, பொறுப்புணர்ந்து பேசியிருக்க வேண்டும். இவரது பேச்சால் அரசுக்கும், கட்சிக்கும் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. அவரை யுவ மோர்ச்சா பதவியிலிருந்து, நீக்க வேண்டும்.

பஜ்ரங்தள் தொண்டர் ஹர்ஷா, பா.ஜ., தொண்டர் பிரவீன் கொலைகளுக்கு பின், கர்நாடகா உட்பட, பல இடங்களில் பா.ஜ., யுவ மோர்ச்சா தொண்டர்கள், ராஜினாமா செய்கின்றனர். அவர்களின் மனதை மாற்றுவதற்கு பதில், இது போன்று பேசியது சரியல்ல.தொண்டர்கள் மற்றும் தேஜஸ்வி சூர்யா இடையே, ஒருங்கிணைப்பு இல்லாததே, பிரச்னைக்கு காரணம். தொண்டர்கள் மீது தாக்குதல், கொலை நடக்கும் போது, அவர்களின் குடும்பத்தினருக்கு தைரியமூட்ட வேண்டும்.

சூழ்நிலையை உணர்ந்து பேச வேண்டும். வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது, என கண்டித்ததாக கூறப்படுகிறது.தற்போது தேசிய யுவ மோர்ச்சா தலைவர் பதவியிலிருந்து, தேஜஸ்வி சூர்யாவை நீக்கிவிட்டு, ஆர்.எஸ்.எஸ்.,சுடன் நல்லுறவு வைத்துள்ள, இளம் தலைவரை இப்பதவியில் அமர்த்த, பா.ஜ., டில்லி தலைவர்கள் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.