ரிஷி சுனக் எடுத்த கடைசி ஆயுதம்: பிரிட்டன் பிரதமர் ரேஸில் முந்துவாரா?

பிரிட்டன் பிரதமர் தேர்தலில் தற்போது முன்னாள் நிதி அமைச்சரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் பின்னடைவில் இருப்பதாக கூறப்படுகிறது.

தனது தோல்வி உறுதி என்றாலும் கடைசி வரை போராடுவேன் என முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் தனது கடைசி ஆயுதத்தை ரிஷி சுனக் வெளியிட்டுள்ளதாகவும் 2029ஆம் ஆண்டுக்குள் 20% வருமான வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறியுள்ளார். அவரது இந்த அறிவிப்பு பிரதமர் ரேஸில் அவரை முன்னுக்கு தள்ளுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ரூ.19 டூ 654.. 1 லட்சம் ரூ.33 லட்சமாக அதிகரிப்பு.. எத்தனை ஆண்டுகளில்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

20% வரிக்குறைப்பு

20% வரிக்குறைப்பு

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்பதற்கான போட்டியில் பின்தங்கிய ரிஷி சுனக், 2029 ஆம் ஆண்டுக்குள் வருமான வரியின் அடிப்படை விகிதத்தை 20% குறைக்கப் போவதாக சபதம் செய்துள்ளார். தனது கடைசி ஆயுதத்தை அவர் சரியான நேரத்தில் பயன்படுத்தியுள்ளதால் அவரது போட்டியாளரான லிட் ட்ரஸுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பணவீக்கம்

பணவீக்கம்

மேலும் பணவீக்கத்தை சமாளிப்பதில் தான் கவனம் செலுத்துவதாகவும், ஆனால் அதை அடைந்தவுடன் 2024 ஆம் ஆண்டில் வருமான வரியின் சதவிகிதங்களை படிப்படியாக குறைத்து 2029ஆம் ஆண்டுக்குள் 20% வருமான வரிக்குறைப்பு என்ற இலக்கை வைத்துள்ளதாகவும் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்கரெட் தாட்சர்
 

மார்கரெட் தாட்சர்

முன்னாள் பிரிட்டன் பிரதமர் மார்கரெட் தாட்சரின் காலத்திற்கு பிறகு ரிஷி சுனக்கின் இந்தத் திட்டம் மிகப்பெரிய வருமான வரிக் குறைப்பை குறிக்கும் என்று பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

பிரதமர் ரேஸில் முந்துவாரா?

பிரதமர் ரேஸில் முந்துவாரா?

கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் புதிய தலைவருக்கு வாக்களிக்க தங்கள் வாக்குச் சீட்டுகளைப் பெறுவதற்கு ஒரு நாள் முன் ரிஷி சுனக் திடீரென இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டதும், இந்த அறிக்கை ஒரு யதார்த்தமானது என கன்சர்வேட்டிவ் கட்சியினர் கூறுவதும், முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்கை பிரதமர் ரேஸில் முன்னுக்கு தள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

டிரஸ் மற்றும் சுனக்

டிரஸ் மற்றும் சுனக்

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது ராஜினாமாவை அறிவித்த நிலையில் ​​பிரிட்டனின் புதிய பிரதமருக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கன்சர்வேடிவ் கட்சியின் டிரஸ் மற்றும் சுனக் ஆகிய இருவரும் பிரதமர் ரேஸில் இருக்கும் நிலையில் கட்சி உறுப்பினர்களின் முடிவு செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியிடப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

British PM candidate Rishi Sunak vows 20% income tax cut by 2029!

British PM candidate Rishi Sunak vows 20% income tax cut by 2029 | ரிஷி சுனக் எடுத்து கடைசி ஆயுதம்: பிரதமர் ரேஸில் முந்துவாரா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.