ரூ.19 டூ 654.. 1 லட்சம் ரூ.33 லட்சமாக அதிகரிப்பு.. எத்தனை ஆண்டுகளில்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

பொதுவாக மல்டிபேக்கர் பங்குகள் பலவும் ஆரம்பகால முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு லாபத்தினை கொடுத்துள்ளன எனலாம். அப்படி லாபம் கொடுத்துள்ள பங்குகளில் ஸ்ரீ ராயலசீமா ஹை ஸ்ட்ரென்த் ஹைப்போ லிமிடெட்-ம் ஒன்று.

ஸ்மால் கேப் நிறுவனத்தை சேர்ந்த நிறுவனங்களில் ஒன்றான இதன் சந்தை மதிப்பு 1116.83 கோடி ரூபாயாகும்.

இந்த நிறுவனம் சோடியம் டிக்ளோரோசோசயனுரேட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. அது மட்டும் அல்ல மோனோகுளோரிக் அமலத்தின் முன்னணி தயாரிப்பாளராகவும் உள்ளது.

மோடி அரசின் புதிய ONDC நெட்வொர்க்-ல் இணைந்த ரிலையன்ஸ் நிறுவனங்கள்.. இனி வேற லெவல்..!

பல முக்கிய கெமிக்கல்கள் உற்பத்தி

பல முக்கிய கெமிக்கல்கள் உற்பத்தி

பல மருந்து பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தும் அமிலமான மோனோகுளோரிக் அமிலத்தின் முன்னணி உற்பத்தியாளராகும். இது தவிர சல்பூரிக் அமிலம், குளோரோசல்போனிக் அமிலம், குளோராமைன் , ப்யூரிகோர், ஓலியம், ஹைட்ரோகுளோரிக் அமிலம், மோனோகுளோரிக் அமிலம், சோடியம் டிக்ளோரோஐசோசயனுரேட், எஸ்டிஐசி, ஹைட்ரஜன் வாயு, அலுமினியம் சல்பேட், ப்ளீச்சிங் பவுடர், சோடியம் ஹைட்ரைடு, சோடியம் மெத்தாக்சைடு பவுடர், சோடியம் மெத்தாக்சைடு சொல்யூசன் என பல அமிலங்களையும் உற்பத்தி செய்கிறது.

மல்டிபேக்கர் பங்கு

மல்டிபேக்கர் பங்கு

மல்டி பேக்கர் பங்குகளில் ஒன்றான ரீ ராயலசீமா ஹை ஸ்ட்ரென்த் ஹைப்போ லிமிடெட், 15 ஆண்டுகளில் பல லட்சம் லாபத்தினை அள்ளிக் கொடுத்துள்ளது. இதில் 15 ஆண்டுகளுக்கு முன்பு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 33 லட்சம் ரூபாயாகும்.

பங்கு விலை வரலாறு
 

பங்கு விலை வரலாறு

இந்த கெமிக்கல் பங்கானது மே 2007, 11ல் 19.7 ரூபாய் என்ற லெவலில் காணப்பட்டது. ஜூலை 29 நிலவரப்படி இந்த பங்கின் விலை 654.8 ரூபாயாகும். இது சுமார் 3223% லாபத்தினை கொடுத்துள்ளது. இதே கடந்த 5 ஆண்டுகளில் இந்த பங்கின் விலையானது 399.85% ஏற்றம் கண்டுள்ளது. இது 131 ரூபாயில் இருந்து ஏற்றம் கண்டுள்ளது.

குறுகிய கால நிலவரம்

குறுகிய கால நிலவரம்

கடந்த 1 ஆண்டில் இப்பங்கின் விலையானது 344.70 ரூபாய் என்ற லெவலில் காணப்பட்ட நிலையில், அதிலிருந்து பார்க்கும்போது, இன்று கணிசமான லாபத்தினை கொடுத்துள்ளது. இதே கடந்த 6 மாதத்தில் இப்பங்கின் விலையானது 96% ஏற்றம் கண்டுள்ளது. இதே 1 மாதத்தில் 57.86% ஏற்றம் கண்டுள்ளது. கடந்த 5 அமர்வுகளில் மட்டும் 14.08% ஏற்றம் கண்டுள்ளது.

லாப விகிதம்

லாப விகிதம்

இந்த நிறுவனத்தின் வருவாய் விகிதம் கடந்த காலாண்டில் 42,086.86 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே இதன் வரிக்கு பிந்தைய லாபம் 4380.69 கோடி ரூபாயாகும். இதே நிகரலாபம் 3732.85 கோடி ரூபாயாகும். இது 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். தொடர்ச்சியாக கடந்த 5 ஆண்டுகளாகவே நல்ல லாபத்தினை கண்டு வரும் இந்த நிறுவனம், இனியும் நல்ல வளர்ச்சியினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

From Rs.19 to Rs.654: A chemical stock that gave many times the return

From Rs.19 to Rs.654: A chemical stock that gave many times the return/ரூ.19 டூ 654.. 1 லட்சம் ரூ.33 லட்சமாக அதிகரிப்பு.. எத்தனை ஆண்டுகளில்?

Story first published: Monday, August 1, 2022, 14:53 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.