விளாடிமிர் புடினின் முக்கிய அதிகாரி மருத்துவமனையில் அனுமதி: விஷம் வைக்கப்பட்டதாக சந்தேகம்


உக்ரைன் படையெடுப்புக்கு எதிராக குரல் கொடுத்து நாட்டைவிட்டு வெளியேறிய புடினுக்கு நெருக்கமான முக்கிய அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஷம் வைக்கப்பட்டதாக சந்தேகப்படும் சூழலில், கை கால்களில் உணர்வற்ற நிலையில் அனடோலி சுபைஸ் என்பவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரஷ்யாவுக்கு வெளியே, பெயர் குறிப்பிடப்படாத ஐரோப்பிய நாடு ஒன்றில் அவர் தங்கியிருப்பதாகவும், அங்குள்ள மருத்துவமனையில் தற்போது சிகிச்சையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விளாடிமிர் புடினின் முக்கிய அதிகாரி மருத்துவமனையில் அனுமதி: விஷம் வைக்கப்பட்டதாக சந்தேகம் | Putin Official Fleeing Russia Suspected Poisoning

பத்திரிகையாளரும் முன்னாள் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருமான Ksenia Sobchak என்பவரே குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
67 வயதான அனடோலி சுபைஸ் நரம்பு மண்டலம் பாதிப்புக்கு உள்ளாகும் உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.

பொதுவாக விளாடிமிர் புடினுக்கு எதிராக குரல் எழுப்புபவர்கள் அனைவரும் விஷம் வைக்கப்பட்டு மரணமடைவதால், இந்த விவகாரமும் அவ்வாறே விசாரிக்கப்படுகிறது.

விளாடிமிர் புடினின் முக்கிய அதிகாரி மருத்துவமனையில் அனுமதி: விஷம் வைக்கப்பட்டதாக சந்தேகம் | Putin Official Fleeing Russia Suspected Poisoning

மட்டுமின்றி, ரசாயன தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
அனடோலி சுபைஸின் நிலை ஆபத்து கட்டத்தில் இருப்பதாக அவரது மனைவியும் திரைப்பட இயக்குநருமான Avdotya Smirnova தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர் புடினுக்கு நெருக்கமான குறைந்தது 5 செல்வந்தர்கள் மர்மமாக கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தவர்கள் என கூறப்படுகிறது.

விளாடிமிர் புடினின் முக்கிய அதிகாரி மருத்துவமனையில் அனுமதி: விஷம் வைக்கப்பட்டதாக சந்தேகம் | Putin Official Fleeing Russia Suspected Poisoning

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் முக்கிய பொறுப்பில் இருந்த அனடோலி சுபைஸ் பதவியை துறந்ததுடன், நாட்டைவிட்டும் வெளியேறியுள்ளார்.
1998 முதல் புடினின் நெருக்கமான அதிகாரிகளில் ஒருவராக செலய்பட்டு வந்த அனடோலி சுபைஸ் உக்ரைன் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டைவிட்டு வெளியேறினார்.

ஜூன் மாதத்தில் சைப்ரஸ் நாட்டில் காணப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இஸ்ரேல் மற்றும் துருக்கியிலும் அனடோலி சுபைஸ் தங்கியிருந்ததாக கூறுகின்றனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.