கடந்த 29 ஆம் தேதியன்று (ஜூலை 29) பூமி 24 மணி நேரத்திற்கு முன்னரே தன்னைத் தானே சுற்றும் ஒருநாள் சுழற்சியை முடித்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நமது பால்வளி அண்டத்தைப் பொறுத்தவரை பூமி உள்ளிட்ட கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. பூமி ஒரு முறை சூரியனைச் சுற்றி வருவதே ஒரு வருடமாக நாம் கணக்கில் எடுத்து கொள்கிறோம். சூரியனை சுற்றி வருவதுபோல பூமி தன்னைத் தானே சுற்றி வருகிறது. பூமி தன்னைத் தானே ஒரு முறை சுற்ற 24 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். இதுவே பூமியில் இரவு, பகல் தோன்ற காரணமாக உள்ளது.
இவ்வாறான சூழலில் கடந்த ஜூலை 29 ஆம் தேதியன்று பூமியானது வழக்கத்திற்கு மாறாக 1.59 மில்லி விநாடிகள் முன்னதாகவே தன்னைத் தானே சுற்றும் சுழற்சியை நிறைவு செய்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக மிகக் குறுகிய பகல் பொழுது அமைந்து சாதனை நிகழ்ந்துள்ளது.
இதற்கு முன்னர் இவ்வாறான சாதனை 50 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. 1960 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி 1.47 மில்லி மில்லி விநாடிகள் முன்னதாகவே தனது சுழற்சியை பூமி நிறைவு செய்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அதேவேளையில், 50 ஆண்டுகளாகவே பூமி வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பூமியின் சுழற்சியில் இவ்வாறான மாறுபட்ட வேகத்திற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.