தங்கம் விலையானது முந்தைய சில அமர்வுகளாக ஏற்றம் கண்டு வந்தது. இந்த நிலையில் வாரத்தின் தொடக்க வர்த்தக நாளான இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது.
இது மேற்கோண்டு குறையுமா? மீண்டும் 1700 டாலர்களை உடைக்குமா? அல்லது மீண்டும் ஏற்றம் காணுமா? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன?
தற்போதைய விலை நிலவரம் என்ன? குறிப்பாக இந்திய சந்தையில் என்ன நிலவரம், வாருங்கள் பார்க்கலாம்.
10 வயதில் ஒரு குட்டி கோடீஸ்வரர்… பல கோடிக்கு அதிபதியான ஆச்சரியம்!
ரூ.1000 சரிவு
தங்கம் விலையானது தொடர்ந்து கடந்த வாரத்தில் ஏற்றம் கண்டாலும், வார இறுதியில் சற்று தடுமாற்றத்திலேயே காணப்பட்டது. இந்த நிலையில் இன்று சற்று சரிவிலேயே காணப்படுகிறது. இதற்கிடையில் கடந்த மூன்று அமர்வுகளில் மட்டும் 10 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது. இந்த சரிவானது தொடருமா? இந்த இடத்தில் வாங்கி வைக்கலாமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
3 வார உச்சம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கிட்டதட்ட 3 வார உச்சத்தில் காணப்படுகின்றது. இது குறைந்த பத்திர சந்தை மற்று டாலரின் மதிப்பு காரணமாக ஏற்றம் கண்டிருந்தது. ஸ்பாட் கோலடின் விலையானது 1755.59 டாலர் என்ற நிலையில் வலுவாக காணப்படுகின்றது. இதே வெள்ளியின் விலையானது 20.22 டாலராகவும் காணப்படுகின்றது.
சீனாவின் உற்பத்தி சரிவு
உலகின் தங்கத்தின் மிகப்பெரிய நுகர்வோரான சீனாவில், கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஜூலை மாதத்தில் சீனாவின் தொழில்துறை உற்பத்தி விகிதமானது சரிவில் காணப்படுகின்றது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
டாலரின் மதிப்பு ஏற்றம்
அமெரிக்க டாலரின் மதிப்பானது 3 வார சரிவில் இருந்து மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. எனினும் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது பொருளாதாரத்தினை கருத்தில் கொண்டும், ரெசசனை கருத்தில் கொண்டும் வட்டி அதிகரிப்பினை தள்ளி வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் டாலரின் மதிப்பு சற்று தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், இது மற்ற கரன்சிதாரர்களுக்கு விலை குறைந்ததாக மாற்றியுள்ளது. ஆக தங்கத்தில் முதலீடுகளை அதிகரிக்க வழிவகுக்கலாம்.
சொந்தமாக எக்ஸ்சேஞ்ச்
உலகின் இரண்டாவது பெரிய நுகர்வோரான இந்தியா விலையுயர்ந்த உலோகங்களுக்காக ஒரு சொந்த எக்ஸ்சேஞ்சினை தொடங்கியுள்ளது. இது தங்கம் விலையில் ஒரு வெளிப்படைத் தன்மையை கொடுக்கலாம்.
சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்?
தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 5.55 டாலர்கள் குறைந்து, 1776.25 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதேபோல வெள்ளி விலையும் சற்று குறைந்து, 20.115 டாலராக காணப்படுகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டுமே குறைந்துள்ள நிலையில், இது இன்னும் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை நிலவரம்?
இதே இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது 10 கிராம்,231 ரூபாய் குறைந்து, 51,195 ரூபாயாக காணப்படுகின்றது. இதே வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 399 ரூபாய் குறைந்து, 57,971 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலை என இரண்டுமே சற்று குறைந்து தான் காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலை இன்று குறைந்து காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 4795 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 38,360 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 5197 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 41,576 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 51,970 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலை இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 40 பைசா குறைந்து. 63.30 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 633 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து, 63,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று – ரூ.47,950
மும்பை – ரூ.47,200
டெல்லி – ரூ.47,350
பெங்களூர் – ரூ.47,250
கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.47,950
gold price on 1st August 2022: gold prices today fall sharply after jumping Rs.1000 in three days
gold price on 1st August 2022: gold prices today fall sharply after jumping Rs.1000 in three days /3 நாளில் தங்கம் விலை ரூ.1000 சரிவு.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு.. வாங்கலாமா, வேண்டாமா?