Latest Twitter Update: ட்விட்டர் நாளுக்கு நாள் புதிய புதுப்பிப்புகளை கொண்டு வருகிறது. சந்தையில் போட்டியில் இருக்கும் சமூக வலைத்தள நிறுவனங்களுடன் தாக்குப்பிடிக்க நிறுவனம் புதுவரவுகளை பயனர்களுக்காக அறிமுகம் செய்கிறது.
ட்விட்டர் தற்போது புதிய அம்சத்தை சோதனை செய்து வருகிறது. விரைவில் நீங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், GIF படங்களை ட்விட்டரில் பிற சமூக வலைத்தளப் பயன்பாட்டைப் போலவே பகிர முடியும். ஒரு அறிக்கையின்படி, ட்விட்டர் புதிய அம்சத்தை சோதிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
மேலதிக செய்தி:
Budget 5G Phones: ரூ.15,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த 5ஜி போன்கள்!
இதன் மூலம் பயனர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் GIFகளை ஒரே ட்வீட்டில் பதிவிட முடியும். பல ஆண்டுகளாக பயனர்கள் எதிர்பார்த்திருந்த அம்சத்தை மைக்ரோ பிளாகிங் தளம் தற்போது சோதித்து வருகிறது.
ட்விட்டரின் புதிய அம்சம்
ட்விட்டர் ஒரு அறிக்கையில், “தேர்ந்தெடுக்கப்பட்ட கணக்குகளுடன் ஒரு புதிய அம்சத்தை நாங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சோதித்து வருகிறோம். இது வடிவமைப்பைப் பொருட்படுத்தாமல் நான்கு மீடியாக்களை ஒரே ட்வீட்டில் இணைக்க அனுமதிக்கும்.
இன்று, அதிகமான மக்கள் புகைப்படங்கள், GIF-களைப் பயன்படுத்துகின்றனர். மேலும், காட்சி உரையாடல்களை வலுப்படுத்த ட்விட்டர் முயற்சி மேற்கொண்டுவருகிறது. இதுமட்டுமில்லாமல், எழுத்துக்களின் எண்ணத்தை அதிகரிக்கலாமா என்றும் சோதனைகள் நடந்து வருகின்றன.” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Xiaomi: சியோமி ஸ்மார்ட் கண்ணாடி; இனி ஸ்மார்ட்போன் வேலைகளை இது பார்த்துக்கொள்ளும்!
ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்த ட்விட்டர் வாசி
நிறுவனம் இப்போது இந்த அம்சத்தை சோதிக்கத் தொடங்கியுள்ளது. சிறிது நாள்களில் இந்த அம்சமானது அனைவருக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் எப்படி இருக்கும் என்பதை ட்விட்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், சில லீக்கர்கள் அது எப்படி இருக்கும் என்பதை ஏற்கனவே பகிர்ந்துள்ளனர்.
மேலதிக செய்தி:
5G Auction: ஏர்டெல்லுக்கு இன்னும் தேவை… விடாமல் பிடிக்கும் ஜியோ!
Alessandro Paluzzi என்ற ட்விட்டர் வாசி ஒரு ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார். அம்சம் எப்படி இருக்கும் என்பதை இது காட்டுகிறது. ட்வீட்டில், அவர் ஒரு புகைப்படம், வீடியோ மற்றும் GIF ஆகியவற்றை இணைத்துள்ளார்.
எலான் மஸ்க் ட்விட்டர்
ட்விட்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்த எலான் மஸ்க், தளத்தில் அதிகபடியான பாட்ஸ் இருப்பதாக குற்றஞ்சாட்டி வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவது நினைவுக்கூரத்தக்கது. இதனை தொடர்ந்து ட்விட்டர் நிர்வாகம் மறுத்து வருகிறது.
எனினும், ட்விட்டர் தொடர்ந்து தனது அடுத்தக்கட்ட பணிகளை சோர்வில்லாமல் செய்கிறது என டெல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். விரைவில் ட்விட்டரில் புதிய அம்சங்கள் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.