Xiaomi: சியோமி ஸ்மார்ட் கண்ணாடி; இனி ஸ்மார்ட்போன் வேலைகளை இது பார்த்துக்கொள்ளும்!

Latest Xiaomi Smart Glasses: நுகர்வோர் டெக் சாதன தயாரிப்பு நிறுவனமான சியோமி, ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தில் சீனாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இருப்பினும், நிறுவனம் ஸ்மார்ட்போன்களை தவிர்த்து பல ஸ்மார்ட் டெக் கேட்ஜெட்டுகளையும் அறிமுகம் செய்துவருகிறது. அந்தவகையில் புதிய ஸ்மார்ட் கண்ணாடியை நிறுவனம் சந்தைக்கு அறிமுகம் செய்கிறது.

சியோமி வெளியிட்டுள்ள விளம்பர போஸ்டரில் இதுவரை கண்டிராத ஒரு புதிய தயாரிப்பை ஆகஸ்ட் 1 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்போவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பின் அதிகாரப்பூர்வ போஸ்டர் நுட்பமாக கண்கண்ணாடிகளை வெளிப்படுத்துகிறது.

TikTok: வருகிறது டிக்டாக் மியூசிக்; அழுத்தத்தை தாங்குமா ஸ்பாடிஃபை?

சியோமி ஸ்மார்ட் கண்ணாடி வெளியீடு

நிறுவனம் ஸ்மார்ட் கண்ணாடிகளை வெளியிடும் என்று இது அறிவுறுத்துகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட மாடல்களில் உள்ள ஸ்மார்ட் கண்ணாடிகளை நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இப்போது தொடங்கியது அல்ல. அவ்வப்போது நிறுவனம் இது தொடர்பாக டீஸ்களை வெளியிட்டுவந்தது.

2021ஆம் ஆண்டு செப்டம்பரில், Xiaomi Smart Glasses Explorer Edition என்ற கான்செப்ட் கண்ணாடியை நிறுவனம் வெளிப்படுத்தியது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, Xiaomi Smart Glasses Discovery Edition ஆனது, எள் அளவுள்ள MicroLED-ஆல் ஆன மைக்ரோ டிஸ்ப்ளேவை கண்ணாடி ஃப்ரேமில் மறைக்க MicroLED ஆப்டிகல் அலை வழிகாட்டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

Jio Recharge: ஜியோ ரீசார்ஜுக்கு அமேசான் பே வழங்கும் ரூ.200 தள்ளுபடி!

புதிய சியோமி ஸ்மார்ட் கண்ணாடியின் அம்சங்கள்

மேம்பட்ட ஆப்டிகல் அலை வழிகாட்டி லென்ஸ் மூலம், ஒளியை மாற்றி காட்சிப்படுத்த முடியும். இந்த ஸ்மார்ட் கண்ணாடியின் எடை 51 கிராம் மட்டுமே என்பது கூடுதல் சிறப்பு. மேலும், இந்த ஸ்மார்ட் கண்ணாடி அழைப்பு, காட்சி, வழிசெலுத்தல், புகைப்படம் எடுத்தல் மற்றும் மொழிபெயர்ப்பு போன்ற செயல்பாடுகளுக்கு எளிதாக பயன்படுத்த முடியும்.

கண்ணாடிகள் குவாட்-கோர் ARM சிப்செட், பேட்டரி, டச்பேட், Wi-Fi/Bluetooth போன்ற இணைப்பு ஆதரவுகளையும் பெறும். கூடுதலாக, சியோமி ஸ்மார்ட் கண்ணாடிகள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

கண்ணாடிகளுக்கு முன்னால் உள்ள கேமராவைப் பயன்படுத்தி, வேகமான “புகைப்படம்” மற்றும் “புகைப்பட மொழிபெயர்ப்பு” போன்ற அம்சங்களை பயனர்கள் அனுபவிக்கமுடியும். உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோன், இயந்திர மொழி கற்றலை அடிப்படையாகக் கொண்ட சியோமியின் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், நிகழ்நேர குரல் மொழிபெயர்ப்பின் பலனையும் அனுபவிக்கலாம்.

படங்கள்:
உலகம் அழியும் முன் ‘கடைசி செல்ஃபிகள்’ எப்படி இருக்கும்? AI கணித்த கொடூரமான புகைப்படங்கள்!

கூடுதலாக, கண்ணாடியால் வார்த்தைகளை நிகழ்நேரத்தில் உரையாக மாற்றி அவற்றை மொழிபெயர்க்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. இது Xiaomi கூறுவது போல் திறமையானதாக இருந்தால், செவித்திறன் குறைபாடு உள்ள பயனர்களுக்கு இது பொருத்தமானதாக இருக்கலாம்.

தற்போது சியோமி வெளியிடுவது “Xiaomi Smart Glasses Explorer Edition” ஆக இருக்கலாம் என டெக் வல்லுநர்கள் கருதுகின்றனர். பயன்பாட்டுக்கு வந்த பிறகு தான் ஸ்மார்ட் கண்ணாடியில் அசல் செயல்பாடுகள் நமக்கு தெரியவரும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.